ஜானகி -ராமன் மறைவு.. பாரதியின் அதிரடி முடிவு.. விரைவில் நிறைவுக்கு வரும் பாரதி கண்ணம்மா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியலாக பாரதி கண்ணம்மா காணப்படுகிறது.

நீண்ட காலங்களாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வரும் சூழலில், தொடர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

இதையொட்டி அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. நீண்ட காலங்களாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் தற்போது ட்விஸ்ட் காணப்படுகிறது.

 பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக முன்னணி தொடராக கலக்கல் டிஆர்பி ரேட்டிங்குடன் காணப்பட்டது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல் உள்ளிட்ட விஷயங்கள் இந்தத் தொடரை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும் ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் ரசிகர்களை சலிப்படைய செய்து வருகிறது.

பாரதி -கண்ணம்மா பிரிவு

பாரதி -கண்ணம்மா பிரிவு

பாரதி மற்றும் கண்ணம்மா இடையிலான பிரிவு, இந்தப் பிரிவால் பரிதவிக்கும் அவர்களது குழந்தைகள், இதையொட்டியே சீரியல் தொடர்ந்து பயணித்து வருகிறது. ரசிகர்களே ஐயோ இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று கதறும் வகையில் இந்தத் தொடர், தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து வருகிறது.

8வது இடத்தில் பாரதி கண்ணம்மா

8வது இடத்தில் பாரதி கண்ணம்மா

இந்தக் கதறலுக்கு இயக்குநர்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும். முன்னதாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தற்போது டிஆர்பியில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை பாக்கியலட்சுமி தொடர் பற்றிக் கொண்டுள்ளது. இந்தத் தொடர் ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறது.

காத்திருக்கும் ட்விஸ்ட்

காத்திருக்கும் ட்விஸ்ட்

இதனிடையே, பாரதி கண்ணம்மாவின் புதிய எபிசோடில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதியின் மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு தயாரான ஜானகி அம்மாள் மற்றும் ராமன் சார் இருவரும் ஒருசேர இறந்து கிடக்கின்றனர்.

கண்ணம்மா ஆச்சர்யம்

கண்ணம்மா ஆச்சர்யம்

தொடர்ந்து கண்ணம்மாவை மருத்துவமனைக்கு விடுப்பு எடுக்கும்படி பாரதி தொலைபேசி மூலம் கூறுகிறார். ஜானகி மற்றும் ராமன் சார் இருவரும் தன்னிடம் வாங்கிய சத்தியம் குறித்து கூறும் பாரதி, குடும்பத்துடன் ஒருநாள் வெளியில் சென்று வரலாம் என்றும் கூறுகிறார். இந்த விஷயம் கண்ணம்மாவை ஆச்சர்யப்படுத்துகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தத் தொடரை பொருத்தவரை பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் தொடர் நிறைவுக்கு வந்துவிடும். அதைத்தான் ரசிகர்களும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், வரும் நாட்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X