தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஹேமா.. கதறியழும் வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியின் பிரதானமான சீரியல்களில் முக்கியமானதாக உள்ள தொடர் பாரதி கண்ணம்மா.
இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டாலும் சில கேரக்டர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுவது போர் அடிக்க செய்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் வெண்பா -ரோகித் மற்றும் பாரதி -கண்ணம்மா உள்ளிட்டவர்களின் காட்சிகள் தற்போதைய எபிசோடிலும் ஒளிபரப்பானது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் பிரதான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது. தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்தத் தொடரில் கதாநாயகி மாற்றம், ஒரே மாதிரியான எபிசோட்கள் உள்ளிட்டவை இரண்டாவது இடத்திற்கு இறக்கியுள்ளது. முதலிடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சிறப்பான மற்றும் பரபரப்பான எபிசோட்களுடன் முன்னேறியுள்ளது.

மாற்றம் இல்லாத டிஆர்பி
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான எபிசோட்களை தர முயற்சி செய்து வருகிறது. புதிதாக ரோகித் என்ற கேரக்டரை களமிறக்கியுள்ளது. அவர் அந்த செயலை சிறப்பாக செய்தாலும் அதனாலும் சீரியலின் டிஆர்பியில் அதிகமான மாற்றம் இல்லை. ஆனாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாகவே இந்த தொடர் காணப்படுகிறது.

லஷ்மிக்கு தெரிந்த உண்மை
இந்தத் தொடரில் தன்னுடைய அப்பா யார் என்பது பாரதி மற்றும் கண்ணம்மாவின் மகள் லஷ்மிக்கு தெரிகிறது. இந்நிலையில் தற்போதைய எபிசோட்டில் கண்ணம்மாவை பார்க்க வரும் அவரது அப்பாவை லஷ்மிக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். இதையடுத்து அவர்கள் இருவரிடையே பாச மழை பொழியப்படுகிறது.

அடம்பிடிக்கும் ஹேமா
இந்நிலையில் தன்னுடைய அப்பாவிற்கு சமையல் அம்மாவை திருமணம் செய்து வைக்க தான் விரும்புவதாக தன்னுடைய பாட்டி சவுந்தர்யாவிடம் தொடர்ந்து ஹேமா கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் சவுந்தர்யா, அவரை சமாதானப்படுத்துகிறார். தான் சொல்லும்வரை பொறுமையாக இருக்கவும் அறிவுறுத்துகிறார்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்
ஆனால் எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதையே மீண்டும் சொல்கிறார் ஹேமா. தன்னுடைய அம்மா இல்லை என்று தான் கருதுவதாகவும், அதனால் சமையல் அம்மாவை தன்னுடைய அப்பாவிற்கு திருமணம் செய்துவைக்க உள்ளதாகவும் அவர் அனைவரிடமும் கூற அவர்கள் அதிர்ச்சியடைகின்றன.
Recommended Video

கதறியழும் வெண்பா
இதனிடையே, வில்லியாக நடிக்கும் வெண்பா, அனைவரும் தன்னுடைய முதுகில் குத்துவதாக கதறி அழுகிறார். அப்போது அங்குவரும் சாந்தி, பாரதியை மட்டும் நம்பாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். ரோகித்தை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகவும் கூறுகிறார். அப்போது அங்குவரும் ரோகித் எப்போதும்போல அவரை வெறுப்பேற்றுகிறார்.


Click it and Unblock the Notifications











