Bharathi kannamma :நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன்.. வெண்பாவிடம் சத்தியம் செய்யும் பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாரதி கண்ணம்மா 2. இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து சில தினங்களிலேயே இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் துவங்கியது. முதல் சீசனில் பாரதியாக அருண் நடித்த நிலையில், இந்த சீசனில் ரோஜா சீரியல் புகழ் சிபு சூர்யன் பாரதியாகியுள்ளார்.
வினுஷாவே, தற்போது இரண்டாவது சீசனிலும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

வெண்பாவிடம் சத்தியம் செய்யும் பாரதி : விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே சீரியலின் இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது. இந்தத் தொடரில் பாரதியாக, ரோஜா சீரியல் புகழ் சிபு சூர்யன் இணைந்துள்ளார். கண்ணம்மாவாக வினுஷாவே களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் இருந்த வெண்பா, சவுந்தர்யா போன்ற கேரக்டர்களும் இந்தத் தொடரில் உள்ளனர்.
தொடரில் சிறையிலிருந்து வெளியில் வருகிறார் சித்ரா. அவரும் கண்ணம்மாவும் ஒரு கட்டத்தில் சந்திக்க, வில்லன்களால் சாகடிக்கப்படுகிறார் கண்ணம்மா. இதையடுத்து, கண்ணம்மாவாக அவர்கள் வீட்டிற்கு வரும் சித்ரா, கண்ணாம்மாவாகவே மாறுகிறார். இதையடுத்து, ஊதாரியாக சுற்றித்திரியும் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு மோதலில் ஆரம்பித்து தற்போது காதல் வந்துள்ளது. பாரதியின் காதலை ஏற்கவில்லை என்றபோதிலும், கண்ணம்மாவிற்கும் அவர்மீது காதல் காணப்படுகிறது.

இதனிடையே, பாரதியின் மாமன் மகளான வெண்பா, வெளிநாட்டிலிருந்து வருவதாகவும், அவர் மிகுந்த திமிராக நடந்துக் கொள்வதாகவும் காட்டப்படுகிறது. அவர், பாரதியை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்றும் மறுக்கிறார். இதனிடையே, வீட்டில் நடக்கும் ஒரு தீவிபத்தில், தன்னுடைய அப்பா மற்றும், பாரதியின் அம்மா சவுந்தர்யாவை காப்பாற்றப் போகும், வெண்பாவிற்கு தீக்காயம் ஏற்படுகிறது. அவரது முகத்தின் ஒரு பகுதி தீயில் வெந்துப் போகிறது.
இதையடுத்து வெண்பாவின் இந்தச் செயல் மிகுந்த பாராட்டுக்கு உள்ளாகிறது. தன்னை, தன்னுடைய முகத்தை இதுபோல தீக்கு இரையாக்கிக் கொண்டு, அவர் தன்னுடைய அத்தையை காப்பாற்றியது குறித்து சவுந்தர்யா மற்றும் பாரதி என குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நெகிழ்ந்துப் போகின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை வெண்பா போட்ட பிச்சை என்று சவுந்தர்யா கூறுகிறார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வரும் பாரதி, தான், வெண்பாவுடன் எப்போதும் துணை இருப்பேன் என்று கூறுகிறார். எந்த சூழலிலும் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்கிறார். இதனிடையே, பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதலும் சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பாரதிக்கு இந்த இக்கட்டான சூழலில் ஆதரவாக பேசுகிறார் கண்ணம்மா. இரவிலும் இவர்களது காதல் கதை தொடர்கிறது.
முன்னதாக கண்ணம்மாவின் அக்கா சாந்தியின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு அவரது அப்பா, வெளியில் செல்கிறார். அப்போது, சமையல்காரருக்கு அவர் காசு கொடுப்பதை பார்க்கும் சிலர், அவரிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகின்றனர். அப்போது, ஒருவர் வந்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு அவரிடம் ஒப்படைக்கிறார். அவர் சாந்தியின் பிரெண்ட் என்பது சாந்தியின் அப்பாவிற்கு தெரியவருகிறது. சாந்திக்கு திருமணம் என்று கேள்வி பட்டவுடன், அவரது முகம் மாறுவதாக காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications











