ரவுடிகளிடமிருந்து காப்பாற்றும் ரோகித்.. ரோகித்திடம் மாட்டிக் கொண்ட வெண்பா.. எப்படி தப்பிப்பார்?

சென்னை : விஜய் டிவியின் பிரதான தொடராக தற்போது பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன.

ஆயினும் ஒரே மாதிரியான காட்சிகளை ஒளிபரப்பி வருவதாக ரசிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இரண்டாவது இடத்தில் தொடர் தற்போது இறங்கியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் வெண்பாவின் திருமணத்திற்காக அவரது அம்மா செய்யும் ஏற்பாடுகள் மற்றும் ரோகித் என்ட்ரிதான்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாக்கியலட்சுமி தற்போது மாறி வருகிறது. முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா அந்தத் தொடரின் ஒரே மாதிரியான காட்சிகள், கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினியின் விலகல் உள்ளிட்ட காரணங்களால் இரண்டாவது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

சிறப்பாக்க முயற்சிகள்

சிறப்பாக்க முயற்சிகள்

இந்நிலையில் தொடரை சிறப்பாக்க பல விதங்களில் பாரதி கண்ணம்மா டீம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இடையில் டாக்டர் பாரதி உறுப்பு மாற்று சிகிச்சையில் ஈடுபடுவதாக திரைக்கதை கொண்டு செல்லப்பட்டது. அதற்கு கண்ணம்மா உதவுவதாகவும் காட்சிகள் அமைந்தது.

 லக்ஷ்மிக்கு தெரிந்த உண்மை

லக்ஷ்மிக்கு தெரிந்த உண்மை

தொடர்ந்து லக்ஷ்மிக்கு தன்னுடைய தந்தை பாரதிதான் என்ற உண்மை தெரிந்துவிட அதை வைத்து சில நாட்கள் எபிசோட்கள் வெளியாகின. இந்நிலையில் வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடைபெற்றது. அவர் மாப்பிள்ளைகளை எப்படி தவிர்க்கிறார் என்றும் காட்டப்பட்டது.

பாரதிக்கு திருமணம்

பாரதிக்கு திருமணம்

இடையில் தன்னுடைய அப்பா பாரதிக்கு தான் திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் லக்ஷ்மியின் அம்மாவை தன்னுடைய அப்பாவிற்கு திருமணம் செய்யப் போவதாகவும் ஹேமா பள்ளி மேடையில் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால் பாரதி மட்டுமில்லாமல் கண்ணம்மா மற்றும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புதிய ப்ரமோ

புதிய ப்ரமோ

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் வெண்பாவை காதலித்து மணம் செய்யவுள்ள ரோகித் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் ரவுடிகளிடம் வெண்பா மாட்டிக் கொள்வதாகவும் தொடர்ந்து ரோகித் அந்த இடத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து அவரை காப்பாற்றுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 அதிர்ச்சியில் வெண்பா

அதிர்ச்சியில் வெண்பா

மேலும் அவர் ரோகித்தை தன்னுடைய வீட்டிற்கு லஞ்சுக்கு அழைக்கிறார். அங்குவரும் ரோகித்தை அவர் தன்னுடைய அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவரோ, தான் வெண்பாவிற்கு பார்த்த மாப்பிள்ளை அவர்தான் என்று கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இதனிடையே ரோகித் அவரை இழுத்து அணைக்கிறார். இதனால் அவர் மேலும் கடுப்பாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X