Don't Miss!
- Finance
நீங்களும் வேண்டாம்.. உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. தெறித்து ஓடிய சீன நிறுவனம்..!
- Automobiles
முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்.. இந்த காருல போறதே தெரியாது! கப்பல் மாதிரி இருக்கும்!
- News
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
குழந்தை லக்ஷ்மியின் நியாயமான ஆசை.. பரிதவிக்கும் கண்ணம்மா -சௌந்தர்யா.. அடுத்தக்கட்டத்தில் தொடர்!
சென்னை : விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களை ப்ரெஷ்ஷாக கொடுத்து வருகிறது விஜய் டிவி. சில சீரியல்களின் இரண்டாவது சீசன்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா. இந்நிலையில் இந்த சீரியலின் புதிய ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இது
என்ன
மணிரத்தினத்திற்கு
வந்த
சோதனை..
பொன்னியின்
செல்வன்
வெளியாவதில்
சிக்கல்?

விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் ஒன்றாகவே கவனம் செலுத்தி வருகிறது. ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முதலிடம் பிடிப்பதே அந்த சேனலின் டார்கெட்டாக உள்ளது. இதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஆயினும் சமீபகாலங்களில் சன் டிவியிடம் தனது முதலிடத்தை கொடுத்துவிட்டு தவித்து வருகிறது.

முதலிடத்தில் சன் டிவி
சன் டிவியின் கயல், சுந்தரி, வானத்தை போல தொடர்கள் கடந்த வாரத்தின் டிஆர்பியில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய நிலையில், 4வது மற்றும் 5வது இடங்களையே விஜய் டிவி பிடிக்க முடிந்தது. 4வது இடத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் பிடித்திருந்தது.

5வது இடத்தில் பாரதி கண்ணம்மா
இதையடுத்து 5வது இடத்தையே பாரதி கண்ணம்மா தொடர் பிடித்திருந்தது. இந்தத் தொடரில் ஒரே மாதிரியான காட்சிகள் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சீரியல் மாற்றுத் தளங்களில் பயணித்து வருகிறது. டாக்டர் பாரதி மேற்கொள்ளும் உறுப்பு மாற்று சிகிச்சையில் அவருக்கு உதவியாக இருக்கிறார் கண்ணம்மா.

லக்ஷ்மியின் நியாயமான ஆசை
இதனிடையே தன்னுடைய மகள் லக்ஷ்மிக்கு அவளுடைய அப்பா குறித்த உண்மை தெரிந்து விட்டதை அறிந்து அவர் பதற்றமடைகிறார். இந்நிலையில் தற்போது சீரியலின் புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் லக்ஷ்மி தன்னுடைய நியாயமான ஆசைகளை தன்னுடைய பாட்டி சௌந்தர்யாவிடம் கூறுகிறார். இதுகுறித்த புதிய ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாட்டியிடம் கேள்வி
தன்னுடைய அப்பா குறித்த உண்மையை ஏன் அவர் மறைத்தார் என்றும் முன்னதாக அவர் கேள்வி எழுப்புகிறார். இதைக் கேட்டு சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இருவரும் செய்வதறியாது தவிக்கின்றனர். லக்ஷ்மியிடம் சௌந்தர்யா நடந்தவை அனைத்திற்கும் மன்னிப்பு கேட்கிறார்.

லக்ஷ்மியின் ஒரே ஆசை
தொடர்ந்து லக்ஷ்மி, தனக்கு தன்னுடைய அப்பா வேண்டும் என்றும் டாக்டர் அப்பா தன்னுடைய அப்பா என்று அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு அவர்தான் தன்னுடைய அப்பா என்று ஊருக்கே சொல்ல வேண்டும் என்று கூறுகிறாள். இதுதான் தன்னுடைய ஒரே ஆசை என்றும் அழுகையின் இடையில் தெரிவிக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
இந்தப் ப்ரமோவின் காட்சிகள் வரும் நாட்களில் இந்த தொடரில் ஒளிபரப்பாகவுள்ளது. லக்ஷ்மி குறித்து தெரியவரும்போது பாரதியின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கண்ணம்மா, பாரதி மீண்டும் இணையும் சூழல் தொடரில் ஏற்பட்டுள்ளது.