வெளியான டிஎன்ஏ டெஸ்ட்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. கதறி அழுத பாரதி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை நிரூபிக்கும் வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டெஸ்ட் ரிசல்டை வைத்தே தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளதாக பாரதி முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

 பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தொடர்ந்து நீண்ட நாட்களாக ரசிகர்களை கட்டிப் போட்ட தொடர்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் தொடரில் நடிகை ரோஷினி கண்ணம்மாவாக நடித்து வந்த நிலையில் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரை விட்டு விலகினார். இதனால் அவரை கண்ணம்மாவாகவே நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் ஆதரவு தொடருக்கு சிறிது குறையத்தான் செய்தது.

டிஆர்பியில் முன்னேற்றம்

டிஆர்பியில் முன்னேற்றம்

இந்தத் தொடர் இடையில் சில மாதங்கள் ரசிகர்களின் ஆதரவு குறைந்து டிஆர்பியிலும் சறுக்கிய நிலையில், பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நுழைவு உள்ளிட்ட சில விஷயங்களை தொடர்ந்து புகுத்தினார் இயக்குநர். இதையடுத்து தொடரின் டிஆர்பி ரேட்டிங்கில் மாற்றம் காணப்பட்டது. டிஆர்பியின் பின்தங்கியிருந்த தொடர் முன்னேற்றம் கண்டது.

 வெளியான டிஎன்ஏ ரிசல்ட்

வெளியான டிஎன்ஏ ரிசல்ட்

ஆனாலும் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் எப்போது நிறைவடையும் என்று ரசிகர்களே கேட்கும் அளவிற்கு தொடரின் நிலைமை இருந்தது. இந்நிலையில் தற்போது ஹேமா மற்றும் லஷ்மி தன்னுடைய குழந்தைகள்தானா என்ற கேள்விகளுடன் டிஎன்ஏ டெட்ஸ் எடுத்த பாரதிக்கு உண்மை தெரியவந்துள்ளது. இந்த டெஸ்ட் ரிசல்டை மருத்துவர் கூறியவுடன் உடைந்து போகிறார் பாரதி.

உடைந்து அழும் பாரதி

உடைந்து அழும் பாரதி

தொடர்ந்து ரிசல்டை வாங்கிக்கொண்டு வெளியில் வரும் பாரதி, உடைந்து அழுகிறார். இத்தனை காலமாக கண்ணம்மாவை தவறாக நினைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மட்டுமில்லாமல் கண்ணம்மா மற்றும் ஹேமா, லஷ்மியின் வாழ்க்கையையும் வீணடித்ததை நினைத்து அவர் கதறி அழுகிறார். இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடத்தப்படும் ஹேமா

கடத்தப்படும் ஹேமா

ஒரு பக்கம் தன்னுடைய திருமணம் முடிந்த நிலையிலும், பாரதியையும் கண்ணம்மாவையும் பழிவாங்க தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார் வெண்பா. ஹேமாவை கடத்தும் வெண்பா, அவரை தீர்த்துக் கட்ட சொல்கிறார். ஆனால் ஹேமாவை கைமாற்றிவிடும் வில்லன்கள், அவரை கடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஒருபக்கம் ஹேமாவை கண்ணம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X