விஜய் டிவி நடத்தி வைத்த திருமணம்.. கதறி அழுத தாமரை!

சென்னை : விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தாமரைச் செல்வி.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் தனது கணவருடன் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் திருமண கலாட்டாவை முன்வைத்து அடுத்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் சேனலின் முன்னணியில் உள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 துவங்கவுள்ளது. இதற்காக ரசிகர்கள் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை சிறப்பாக கடந்துள்ளது. கடந்த சீசனில் ராஜு சிறப்பாக பங்கேற்று டைட்டிலை வென்றார். அடுத்த இடத்தை ஆங்கர் பிரியங்கா பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தாமரை டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறப்பான போட்டியாளர் தாமரை

சிறப்பான போட்டியாளர் தாமரை

நாட்டுப்புற கலைஞரான தாமரைச் செல்வி, கடந்த சீசனின் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், முதல் வாரத்தில் இவரை அமைதியாக பார்க்க முடிந்தது. தொடர்ந்து அடுத்த வாரத்தில் இருந்து தன்னுடைய அட்ராசிட்டிகளை துவங்கினார். இவருக்கும் பிரியங்காவிற்கும் இடையிலான சண்டை நிகழ்ச்சியில் வரவேற்பை பெற்று டிஆர்பியை ஏற்றியது.

 பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தாமரை

பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தாமரை


பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல்சுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறினார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்று கடைசி வரை இருந்தார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தனது கணவர் பார்த்தியுடன் கலந்துக் கொண்டுள்ளார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

ரியல் ஜோடிகளான இவர்கள் இருவரும் தங்களது நடனத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ரவுண்டுகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த வாரத்தில் ஆண் வேடமிட்டு பெண்களும் பெண் வேடமிட்டு ஆண்களும் பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 திருமண கலாட்டா ரவுண்ட்

திருமண கலாட்டா ரவுண்ட்

இந்நிலையில் இந்த வாரம் திருமண கலாட்டாவை முன்வைத்து புதிதாக ரவுண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பார்த்தி இருவரும் திருமணக் கோலத்தில் காணப்படுகின்றனர். இதையடுத்து தாமரை செல்வி கதறி அழுகிறார். இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

நிறைவேறிய தாமரையின் கனவு

நிறைவேறிய தாமரையின் கனவு

தாமரை செல்விக்கு நடந்த 2வது திருமணம் அவசரமாக நடந்துள்ளது. ஒரு ரூமில் நண்பர்கள் முன்னிலையில் இவர் திருமணம் நடைபெற்ற நிலையில் புகைப்படங்கள்கூட எடுக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது விஜய் டிவி.

ரம்யா கிருஷ்ணனிடம் ஆசிர்வாதம்

ரம்யா கிருஷ்ணனிடம் ஆசிர்வாதம்

திருமண கோலத்தில் வரும் அவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் நடுவர் ரம்யா கிருஷ்ணன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். தொடர்ந்து திருமண கோலத்தில் அவர்கள் புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் தாமரையின் கனவை நிறைவேற்றியுள்ளது விஜய் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X