BB 7 :பிக்பாஸ் சீசன் 7க்கு தயாராகும் ரசிகர்கள்.. எப்ப துவங்குது தெரியுமா?
சென்னை : விஜய் டிவியில் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இடம்பெற்றுள்ள பிக்பாஸ், அடுத்தடுத்து 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் இந்த நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது.
ஜூலையில் துவங்கும் பிக்பாஸ் சீசன் 7 : விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக எப்போதுமே உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி முன்னிலையில் இருக்கும். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தன்னுடைய அடுத்த சீசனை அடுத்ததாக துவங்கவுள்ளது. குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்துவரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதத்திற்கு நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படும் நிலையில், விஜய் டிவியின் ப்ரமோ மற்றும் அறிவிப்பிற்குதான் ரசிகர்கள் வெயிட்டிங்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த ஆண்டின் ஜனவரியில்தான் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது சில மாத இடைவெளியிலேயே இதன் அடுத்த சீசன் துவங்கவுள்ளது. வரும் ஜூலை மாதம் இரண்டாவது அல்லது 4வது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் வித்தியாசமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் இரண்டு பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள், சமூக வலைதளத்திலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள், திருநங்கை, பொதுசேவை அல்லது அரசியலை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர், டான்ஸ் மாஸ்டர்கள் என விதவிதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள், ரசிகர்களை கவரும்வகையில் பல்வேறு டாஸ்குகளை தினந்தோறும் செய்து பிக்பாஸ் வீட்டை களைகட்டினர்.இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த ஆர்வம் தற்போதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த சீசனில் போட்டி பலமாக இருந்த நிலையில், இந்த சீசனிலும் ஒருவருக்கொருவர் டப் கொடுக்கும் வகையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











