குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி... பார்க்க தயாரா மக்களே!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

போட்டியில் 6 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், கோப்பையை தட்டித் தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோ குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி முடித்துள்ளது. முதல் இரண்டு சீசன்களில் வனிதா விஜய்குமார் மற்றும் கனி ஆகியோர் கோப்பையை கைப்பற்றினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இதன் 3வது சீசன் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை


மிகுந்த ஸ்ட்ரெசுடன் தற்காலத்தில் மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களின் ஸ்ட்ரெஸ்களை உடைக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்களாக இந்த நிகழ்ச்சி இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை ஆண்டு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 பிரம்மாண்ட இறுதிப்போட்டி

பிரம்மாண்ட இறுதிப்போட்டி

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் இறுதிப்போட்டி பிற்பகல் 3 மணியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. இதில் அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா மற்றும் ஸ்ருதிகா நேரடி போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

6 போட்டியாளர்கள் பங்கேற்பு

6 போட்டியாளர்கள் பங்கேற்பு

இதேபோல வைல்ட் கார்ட் என்ட்ரியாக கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்து இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாகவும் அதிகமான போட்டிகளுடனும் காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இறுதிப்போட்டி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே இதன் சூட்டிங் நடைபெற்று முடிந்துவிட்டது. இதை கோமாளி ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் தங்களது சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டிருந்தனர். இதனிடையே இன்று ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோப்பையை வெல்லப்போவது யார்?

கோப்பையை வெல்லப்போவது யார்?


இந்த இறுதிப்போட்டியில் வெல்லப் போவது யார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். இதில் ஆரம்பத்தில் சிறிது மெதுவாக துவங்கினாலும் தொடர்ந்து சிறப்பான பல டிஷ்களை வழங்கி தர்ஷன் கவனத்தை பெற்றுள்ளார். இதேபோல ஸ்ருதிகாவும் தொடர்ந்த பல சிறப்பான டிஷ்களை வழங்கியுள்ள நிலையில் இவர்கள் இருவருக்குள்ளே கடுமையான போட்டி இருக்கும் என்றும் இவர்களில் ஒருவர் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 ரங்கராட்டினம் சுற்றும் நடுவர்

ரங்கராட்டினம் சுற்றும் நடுவர்

தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் நடுவர் வெங்கடேஷ் பட், கோமாளிகளை ரங்கராட்டினத்தில் வைத்து வேகமாக சுற்றுகிறார். தேர்ந்த ப்ரபஷனல் போல அவர் ராட்டினத்தை சுற்றுவதாக கமெண்ட்கள் எழுகின்றன. இதில் கோமாளிகள் மற்றும் போட்டியாளர்களின் அடுத்தடுத்த சம்பவங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன.

ரசிகர்கள் வருத்தம்

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிறப்பான பல டாஸ்க்குகளுடன் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை மீண்டும், அடுத்த சீசனில் காண, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வருத்தமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X