Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
என்னது அயர்ன் பாக்ஸ்ல முட்டை ஆம்லேட்டா... என்னடா இது புது டாஸ்க்கா இருக்கு...
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சில குக்குகள் எலிமினேட் ஆன நிலையில், ஸ்ருதிகா, அம்மு அபிராமி, ரோஷினி உள்ளிட்ட குக்குகள் தற்போது அடுத்தடுத்த போட்டிகளை சந்தித்து வருகின்றனர்.
தளபதி
66
சூட்டிங்
ஸ்பாட்
புகைப்படத்தை
கசிய
விட்டாரா
மனோபாலா?
குழப்பத்தில்
விஜய்
ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவி எப்போதுமே நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் முன்னிலையில் காணப்படுகின்றன. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது விஜய் டிவி.

குக் வித் கோமாளி சீசன் 3
இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதனிடையே குக் வித் கோமா சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் தற்போது நடுவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த எலிமினேஷன்
தற்போது கோமாளிகளுடன் இணைந்து நடுவர் மகேஷ் பட்டும் தன்னுடைய பங்கிற்கு காமெடி செய்து வருகிறார். இதனால் இந்த ஷோ சிறப்பாக களைகட்டி வருகிறது. அடுத்தடுத்து மனோபாலா உள்ளிட்டவர்கள் எலிமினேஷன் ஆன நிலையில் தற்போது ஸ்ருதிகா அர்ஜூன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, ரோஷினி உள்ளிட்டவர்கள் கலக்கி வருகின்றனர்.

சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன்
இதனிடையே கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, ஷிவாங்கி, பரத் உள்ளிட்டவர்கள் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் கலந்து கொளவ்து முன்னதாக வெளியான ப்ரமோவில் தெரியவந்துள்ளது.

அயர்ன் பாக்சில் முட்டை ஆம்லேட்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் அயர்ன் பாக்சில் முட்டை ஆம்லேட் போட குக்குகள் முயல்வதும் கோமாளி ஷிவாங்கி, பெரிய அயர்ன் பாக்ஸ் கேட்பதுமாக சிறப்பாக காணப்படுகிறது. புகழ் அயர்ன் பாக்சிலேயே முட்டை பொடிமாஸ் செய்கிறார். மொத்தத்தில் இந்த வாரம் சிறப்பான தரமான சம்பவங்கள் காத்திருப்பது தெரிகிறது.
சிறப்பான வரவேற்பு
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் காணப்படுகிறது. மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர்.