Sivaangi : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் இறுதிப் போட்டியாளர் யார் தெரியுமா.. தெரிஞ்சிக்கலாங்களா

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை சிறப்பாக அரங்கேற்றி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் அல்லது ஒன்று விட்டு ஒரு வாரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இம்யூனிட்டி சுற்றில் நடிகை சிவாங்கி வெற்றிப் பெற்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் அவரது சமையலில் முன்னேற்றம் காணப்படுகிறது.

Vijay TVs Cook with comali season 4 first final contestant Sivaangi

முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக மாறிய சிவாங்கி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது 4வது சீசனில் நடைபோட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேஷன் சுற்றுகளில் ஒவ்வொருவராக வெளியேற தற்போது இறுதிச்சுற்றுக்கு 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கடநத 3 சீசன்களில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்தார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி இவருக்கு டான், காசேதான் கடவுளடா மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது குக்காக பங்கேற்று அசத்தி வருகிறார். துவக்கத்தில் சாதாரணமாக துவங்கிய இவரது பயணம் தற்போது சிறப்பாக மாறியுள்ளது.

Vijay TVs Cook with comali season 4 first final contestant Sivaangi

இசைக் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் -பின்னி கிருஷ்ணகுமார் தம்பதியின் மகளான சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளார். கடந்த 3 சீசன்களில் இவரது குறும்புத்தனத்தை ரசிகர்கள் ரசித்த நிலையில், தற்போது குக்காக மாறி அசத்தி வருகிறார். பல இம்யூனிட்டி சுற்றுகளில் இவர் தேர்வாகி ரசிகர்களை கவர்ந்துள்ளார். சில எலிமனேஷன் சுற்றுகளிலும் இவரை பார்க்க முடிந்தது.

கடந்த வாரத்தில் தன்னுடைய பிறந்தநாளையொட்டி லைவில் பேசிய சிவாங்கி, தர்ஷன் கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த ஆண்டாவது தன்னுடைய காதலனை சந்திப்பேன் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது இந்த வார இம்யூனிட்டி ரவுண்ட்டில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் நேரடி பைனல் போட்டியாளராக சிவாங்கி தற்போது தேர்வாகியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் 5 பேர் பைனலிஸ்டாக பங்கேற்கவுள்ள நிலையில், அடுத்தடுத்து 4 போட்டியாளர்கள் குறித்து அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் குறித்து எதுவும் தெரியாது என்ற நிலையில்தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறினார் சிவாங்கி. இந்நிலையில் தற்போது அவர் முதல் பைனல் போட்டியாளராக மாறியுள்ளார். இந்நிலையில் அவர் டைட்டிலை வெற்றி பெறவும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X