CWC4 :மொட்டை வெயிலில் அண்ணனுடன் இணைந்து குல்பி சாப்பிட்ட ஷிவாங்கி!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி அடுத்தடுத்த வாரங்களில் சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வாரயிறுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பான டாஸ்க்குகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் கிராமத்து மண்மணம் பேசும் எபிசோடாக அவுட்டோரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

Vijay TVs Cook with comali season 4 shows new promo makes fans more happy and thrilling

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து தற்போது 4வது சீசனில் சிறப்பான அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மன இறுக்கத்தை போக்கும் நிகழ்ச்சியாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் மற்றும் சேலஞ்ச்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது.

இந்த வாரம் கடந்த வாரங்களை போல இல்லாமல் சிறப்பு எபிசோடாக, கிராமத்து மண் மணம் பேசும் நிகழ்ச்சியாக அவுட்டோரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியின் குக்குகளும் கோமாளிகளும் கிராமத்து பெருமை பேசும் கெட்டப்புகளில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அடிக்கும் வெயிலுக்கு தகுந்தபடி சிறப்பான டாஸ்க்குகளை இந்த நிகழ்ச்சி கொண்டிருந்தது. ஒவ்வொரு டீமிற்கும் அதிகமான குல்ஃபி சாப்பிடும் சேலஞ்ச் வைக்கப்பட்டது.

இந்த சேலஞ்சில் ஒவ்வொரு டீமும் மிகவும் சிறப்பாக பங்கேற்றது. மொட்டை வெயிலில் இந்த சேலஞ்ச் சிறப்பாகவே அமைந்தது என்றாலும், அதிகமான குல்ஃபிக்களை சாப்பிடும் டாஸ்க் என்பதால், விரைவாக குல்ஃபிக்களை சாப்பிடுவதில் அவர்கள் திணறித்தான் போனார்கள். ஒருவர் கவரை பிரித்துக் கொடுக்க, அதை மற்றவர் சாப்பிட, இந்த சேலஞ்ச் களைகட்டியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழ் தன்னுடைய தங்கையாக பாவிக்கும் ஷிவாங்கியுடன் இணைந்து குல்ஃபி சாப்பிட்டார்.

Vijay TVs Cook with comali season 4 shows new promo makes fans more happy and thrilling

ஒரு கட்டத்தில் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவிற்கே இந்த சேலஞ்சை திருப்பி விட்டனர் போட்டியாளர்கள். அவர்களும் இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு வேகமாக குல்ஃபிக்களை வாய்க்குள் அடுக்கினர். இப்பொழுது தெரிகிறதா கஷ்டம் என்று அவர்களையே போட்டியாளர்கள் கலாய்த்தனர். அவர்களும் அதை ஆமோதித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆன்ட்ரீன் உள்ளிட்டவர்கள் மிகவும் சிறப்பாக குல்ஃபிக்களை சாப்பிட்டனர்.

தொடர்ந்து இந்த அவுட்டோர் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியது. இந்த கொண்டாட்டங்களில் தொகுப்பாளர் ரக்ஷன் மட்டுமில்லாமல் நடுவர்களும் சிறப்பாக கலந்துக் கொண்டனர். காளையன் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சி களைகட்ட காரணமாக அமைந்தனர். தொடர்ந்து கிராமத்து சுவையில் அடுத்தடுத்த டிஷ்களையும் போட்டியாளர்கள் செய்து அசத்தினர். இந்த டாஸ்க்குகளில் நடுவர்களும் கலந்துக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X