Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இறுதிக்கட்டத்தை எட்டிய குக் வித் கோமாளி ஷோ.. இறுதிப் போட்டியாளர்கள் யார் தெரியுமா?
சென்னை : விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை தொடராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் தற்போது 3வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக ரசிகர்களை கவர்ந்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சல்மானை கொல்ல ரூ.4 லட்சத்திற்கு துப்பாக்கி வாங்கினோம்.. திடுக்கிடும் தகவலை சொன்ன லாரன்ஸ் பிஸ்னோய்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியையும் இணைத்து ரசிகர்களுக்கு கலக்கல் காமெடி அனுபவத்தை கொடுத்து வருகிறது. இதன் குக்குகள், கோமாளிகள் மட்டுமின்றி நடுவர்களும் சிறப்பான காமெடியை செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று வருகின்றனர். இதன்மூலம் இவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் பிரபல காமெடி நடிகையாக மாறியுள்ளார் ஷிவாங்கி.

டான் படம்
சமீபத்தில் இவரது நடிப்பில் டான் படம் வெளியானது. தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இதேபோல இந்த நிகழ்ச்சியின்மூலம் தற்போது படவாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகர் அஸ்வின். இவரைத் தொடர்ந்து புகழுக்கும் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இறுதிக்கட்டத்தில் நிகழ்ச்சி
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அம்மு அபிராமி, வித்யூலேகா மற்றும் தர்ஷன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளனர்.

கோமாளிகள் கலக்கல் காமெடி
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் களமிறங்குவது வழக்கம். அவர்களுடன் இணைந்து கோமாளிகள் செய்யும் கலக்கல் காமெடியும் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் குறித்த ப்ரமோவும் வெளியாகியுள்ளது.