Don't Miss!
- News
இடைத்தேர்தலில் ‘சோலோ’வாக களமிறங்க ரெடி..? ஆலோசிக்கும் தேமுதிக! அதுவும் அதே நாளில்.. ஓஹோ.. ரைட்டு!
- Sports
72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!
- Lifestyle
ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் போது மட்டும்தான் இந்த விஷயங்களை செய்வார்களாம் தெரியுமா?
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Technology
வாங்கிடாதீங்க.. அசல் விலையை விட ரூ.10,000 கம்மி விலைக்கு கிடைக்கும் இந்த போனை வாங்கிடாதீங்க! ஏன்?
- Finance
ஒரு குரங்கு குல்லா 40000 ரூபாய்.. ஒரு ஸ்டிக்கர் மட்டும் தான் எக்ஸ்ட்ரா..!
- Automobiles
இனி புதுசா வரப்போற கார் எதுலயும் இந்த பிரேக் இருக்காது! சென்னை நிறுவனம் வேற லெவல்ல ஒன்ன தயாரிச்சிருக்காங்க!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
யூடியூப்ல தாங்க அதிக வருமானம்.. பளீச் டேட்டா கொடுத்த விஜய் டிவி பிரபலம்!
சென்னை : சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது வீடியோ ஜாக்கி பயணத்தை கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை தொடர்ந்தவர் மணிமேகலை.
தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தன்னுடைய குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்ற நடனக் கலைஞரை கடந்த 2017ம் ஆண்டில் இவர் திருமணம் செய்துக் கொண்டார்.
இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதக் கூடாது... வாரிசு கண்டிப்பா 100 நாட்கள் ஓடும்: சரத்குமார் அதிரடி

விஜே மணிமேகலை
சன் மியூசிக் டிவியில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இந்த காலகட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். முன்னதாக தான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே வீடியோ ஜாக்கியாக கடந்த 2009ம் ஆண்டிலேயே தனது பயணத்தை துவங்கினார்.

கோமாளியாக ஈர்க்கும் மணிமேகலை
தற்போது விஜய் டிவியில் பணியாற்றிவரும் மணிமேகலையின் ரசிகர்கள் வட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது சேட்டைகளுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம்.

குக் வித் கோமாளி சீசன் 4
குக் வித் கோமாளியில் ஏதாவது ஒரு குக்கிற்கு இவர் கோமாளியானால் அவரது பாடு அன்றைய தினம் திண்டாட்டம்தான். அவரை வைத்து செய்து விடுவார் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி இவருக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை பெற்றுத் தந்து வருகிறது. தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்பது ப்ரமோ மூலம் உறுதியாகியுள்ளது.

யூடியூப்பில் பிசி
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீடுகள், யூடியூப்பில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது என்று தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார் மணிமேகலை. இவரது யூடியூப் பக்கத்தில் இவர் பதிவிடும் அடுத்தடுத்த வீடியோக்கள் ரசிகர்களின் அதிகமான லைக்ஸ்களையும் வியூஸ்களையும் பெற்று வருகின்றன.

காதல் திருமணம்
கடந்த 2017ம் ஆண்டில் ஹுசைன் என்ற நடனக் கலைஞரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக் கொண்ட மணிமேகலை, தற்போது புதிய வீடு, கார், பைக் என செட்டில் ஆகியுள்ளார். அவரது சொத்து மதிப்பு பல கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

யூடியூப்பில்தான் அதிக வருமானம்
இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் அவருக்கு அதிகமான வருமானம் வருவது விஜய் டிவியிலா அல்லது யூடியூப்பிலா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பளீச்சென யூடியூப் மூலம்தான் என்று பதிலளித்துள்ளார். ஆனாலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்தான் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.