ஷிவாங்கியை புலம்ப விட்ட குக் வித் கோமாளி ஷோ.. எதுக்காக புலம்பினாங்க தெரியுமா?
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்தவர் ஷிவாங்கி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக ப்ரமோஷன் ஆகியுள்ளார் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சியில் புகழ் உள்ளிட்டவர்கள் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர். பாலா இந்த சீசனில் பங்கேற்கவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
விஜய் டிவியின் முன்னணி தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் கு கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை துவங்கியுள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிறப்பான நிகழ்ச்சி
வாரயிறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் வெற்றிக்கு குக்குகள் மட்டுமில்லாமல் கோமாளிகள் மற்றும் நடுவர்களும் முக்கியமான காரணங்களாக இருந்து வருகின்றனர்.

புதிய குக்குகள்.. புதிய கோமாளிகள்
இந்த நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் புதிய கோமாளிகள் களமிறங்கியுள்ளனர். இதேபோல புதிய குக்குகளும் இணைந்துள்ளனர். கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்துவந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். கடந்த சீசன்களில் குக்குகளை மாறி மாறி வம்பிழுத்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி, கோமாளிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.

புதிய ப்ரமோக்கள்
இந்த வாரத்திற்கான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் ஷிவாங்கி புலம்பும் காட்சிகளை காண முடிகிறது. வாழ்க்கையில் நாம் கொடுப்பது எல்லாம் நமக்கு ஒருநாள் திரும்ப வரும் என்று அவர் புலம்புகிறார்.

புலம்பும் ஷிவாங்கி
இந்த வார எபிசோடில், காதில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் கோமாளிக்கு தேவையான பொருட்களை விளக்குவதாக காணப்படுகிறது. இதில்தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் ஷிவாங்கி. கடந்த சீசனில் தான் எப்படி என்ஜாய் செய்தேன் என்றும் தற்போதுதான் அதன் கஷ்டம் தெரிவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

ஷிவாங்கியை வெறுப்பேற்றும் தர்ஷன்
அந்த நேரத்தில் அங்குவரும் ஆங்கர் தர்ஷனும் தன்னுடைய பங்கிற்கு ஷிவாங்கியை வெறுப்பேற்றுகிறார். எத்தனை குக்குகளை உட்கார வைத்து ஆடியிருப்பார் ஷிவாங்கி, இப்போது அவரை வெறுப்பேற்றும்வகையில் கோமாளி ஆடுவதாக தர்ஷன், தாமுவிடம் கூறுகிறார். இதனால் ஷிவாங்கி மேலும கடுப்பாகிறார்.


Click it and Unblock the Notifications











