Eeramana Rojaave 2 :அம்பலமாகும் ஜீவா -காவ்யா காதல்.. பார்த்தி அதிரடி முடிவு.. மூக்குடைபட்ட அத்தை!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஈரமான ரோஜாவே 2 தொடர்.
இந்தத் தொடரில் காதலித்தவனை விட்டுவிட்டு சந்தர்ப்ப சூழலால், அவருடைய அண்ணனை திருமணம் செய்யும் நாயகி சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒருவழியாக பிரச்சினைகள் ஓய்ந்து தன்னுடைய கணவருடன் இணையும் சூழல் வாய்க்கும் வேளையில் பிரச்சினை ஹீரோவின் அத்தை ரூபத்தில் எட்டிப் பார்க்கிறது.

பார்த்தியின் அதிரடி முடிவு : விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ஈரமான ரோஜாவே 2 தொடர். திருமணத்திற்கு முந்தைய காதல், ஜோடி மாறிய திருமணம், அது ஏற்படுத்தும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து காவ்யா சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பான சூழலில், அவர் எப்படி அந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார் என்பதாக கதைக்களம் காணப்பட்டது.

ஒருகட்டத்தில் தன்னுடைய முன்னாள் காதலை மறந்து, தன்னுடைய கணவனை ஏற்றுக் கொள்ளும் காவ்யாவிற்கு, அவரது மாமியார் உள்ளிட்டவர்கள் எப்படி குடைச்சல் கொடுக்கிறார்கள் என்பதாக கதைக்களம் நகர்ந்த நிலையில், ஒருவழியாக அனைத்து தரப்பினரும் காவ்யாவை ஏற்றுக் கொண்டு, பார்த்தியுடன் அவர் இணைவதாக கதை காணப்பட்டது. இருவருக்கும் ரிஷப்ஷன் நடைபெற்ற நிலையில், அங்குவரும் பார்த்தியின் அத்தை, தன்னுடைய மகளின் வாழ்க்கைக்காக காவ்யா -பார்த்தி வாழ்க்கையை நிர்மூலமாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
காவ்யாவிற்கு திருமணத்திற்கு முந்தைய காதல் இருந்தது மட்டுமே பார்த்திக்கு தெரிந்திருந்த நிலையில், அவனுடைய தம்பி ஜீவா தான், காவ்யாவின் முன்னாள் காதலன் என்பதை சபையில் போட்டு உடைக்கிறார் அவரது அத்தை. இதைக்கேட்டு குடும்பமே குலைந்து போகிறது. இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜீவாவின் மனைவி பிரியா தவிக்கிறார். பார்த்தி மற்றும் ஜீவாவின் தந்தை அருணாச்சலம் தன்னுடைய அக்காவிடம் தொடர்ந்து பேச வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

ஆனால் அவரோ தன்னுடைய மகள் ரம்யாவை அந்தக் குடும்பத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வில்லத்தனத்தை தொடர்கிறார். ஜீவா மற்றும் காவ்யா இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார்களோ என்று பலவாறாக பேசுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். அருணாச்சலம் தொடர்ந்து தன்னுடைய அக்காவிடம் கெஞ்ச, பார்த்தியின் முடிவு தெரியாமல் தான் அங்கிருந்து நகர மாட்டேன் என்று அத்தை கூறுகிறார்.

இதையடுத்து பேசத்துவங்கும் பார்த்தி, சந்தர்ப்ப சூழலால்தான் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும், இது தெரிந்தபின்பு காவ்யா மீது தன்னுடைய காதல் மேலும் அதிகமாகியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இனிமேல் தான் காவ்யாவை மிகவும் அதிகமாக நேசிக்கப் போவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதையடுத்து பார்த்தியை நெகிழ்ச்சியுடன் காவ்யா பார்க்கிறார். தன்னுடைய திட்டம் பலிக்காத அத்தை, மிகுந்த கோபத்துடன் மேலும் பார்த்தியை உசுப்பேற்றும் வகையில் வார்த்தைகளை பிரயோகிக்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











