Eeramana Rojave 2 :எங்களுக்கு நடுவுல வராத.. எங்க சண்டையை நாங்களே பார்த்துக்குறோம்.. ஜீவா உறுதி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடர்கள் வரிசையில் ஈரமான ரோஜாவே 2 முக்கிய இடம் பிடித்துள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால், ஜோடி மாறி நடக்கும் திருமணம், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.
ஜீவா -பிரியா மற்றும் பார்த்தி -காவ்யா என இரண்டு ஜோடிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளை இந்தத் தொடர் மையமாக கொண்டுள்ளது.

காவ்யாவிடம் காட்டம் காட்டும் ஜீவா : விஜய் டிவியின் முக்கியமான தொடர்கள் வரிசையில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரும் இடம்பெற்றுள்ளது. டிஆர்பியிலும் இந்தத் தொடர் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஜீவா மற்றும் காவ்யா இடையில் காதல் ஏற்பட சந்தர்ப்ப சூழ்நிலையால், அவரது அண்ணன் பார்த்தியை காவ்யா திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து பார்த்திக்கு நிச்சயிக்கப்பட்ட பிரியா, அவரது தம்பி ஜீவாவை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறார்.
இதனால் பார்த்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் காவ்யாவும், பிரியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜீவாவும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் மனம் மாறி, தங்களது துணையை ஏற்றுக் கொள்ள முன்வருகின்றனர். அப்போது, ஜீவா மற்றும் காவ்யா காதல் வெளிப்படுத்தப்படுகிறது. இதையடுத்து பார்த்தி மற்றும் பிரியா இருவரும், காவ்யா மற்றும் ஜீவாமீது கோபமடைகின்றனர்.அவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையை முன்னமே கூறியிருக்க வேண்டும் என்பது அவர்கள் தரப்பு நியாயமாக உள்ளது. இதையடுத்து பிரியா, கோபித்துக் கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தால்தான் அந்த வீட்டில் அனுமதி என்று, ஜீவாவின் அப்பா கூறியதால், ஜீவா, தன்னுடைய மாமியார் வீட்டிலேயே செட்டில் ஆகிறார். பிரியா ஏற்படுத்தும் அவமானத்தை பொருத்துக் கொண்டு காமெடி செய்கிறார்.
பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் கடுப்பை ஏற்படுத்துகிறார். அந்த அளவிற்கு பிரியாவின் அவமானப்படுத்தல்கள் நீளுகிறது. ஜீவா தெரியாமல் ஒளித்துவைக்கும் சரக்கை எடுத்து குடித்துவிட்டு, தன்னை ஏமாற்றி, மானபங்கப்படுத்த ஜீவா முயன்றதாகக்கூறி தற்போது அவரை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறார். ஆனால் தன்னுடைய மனைவி இல்லாமல் தான் தன்னுடைய வீட்டிற்கு போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் ஜீவா. வீட்டிற்கு வெளியிலேயே டென்ட் போட்டுக் கொண்டு செட்டில் ஆகிறார்.
மழை, வெயிலில் அவர் மிகுந்த பிரச்சினைகளுடன் டென்டில் இருக்கிறார். ஆனால் அவர் இதுபோல செய்வதால் தன்னுடைய மனம் மாறப் போவதில்லை என்று பிரியா கூறுகிறார். இதனிடையே, அங்குவரும் காவ்யா, தன்னுடைய அக்காவிடம், ஜீவா மன்னிப்பு கேட்டும் ஏன் மன்னிக்காமல் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து அவர்களுக்கு இடையில் பேசும் ஜீவா, இனிமேல் தங்களுக்கு இடையில் காவ்யா வரவேண்டாம் என்றும் புருஷன் -பொண்டாட்டி சண்டையை தாங்களே பேசி தீர்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார். இதனால் பிரியா மற்றும் காவ்யா இருவரும் அதிர்ச்சி அடைவதாக தற்போதைய ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











