Don't Miss!
- News
அபிராமி.. அபிராமி.. கடைசியில் தெரிந்த உண்மை.. காட்டிக்கொடுத்த வீடியோ.. இப்ப அந்த நாத்தனாரை காணோமாமே
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பார்த்தியை விட்டு தூரமாக போகச்சொல்லும் மாமியார்.. தவிப்பில் காவ்யா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மாறியுள்ளது.
இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
திருமணத்தின்போது கடத்தப்படும் பிரியா, அதையொட்டி மாறும் ஜோடி, தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுகிறது இந்தத் தொடர்.
மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம்.. காதலுக்கு உருவம் தடையில்லை என நிரூபிக்கும் ரவீந்தர்!'

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மாறியுள்ளது. தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. திருமணத்தின் போது ப்ரியா கடத்தப்பட பார்த்தியை காவ்யா மணக்க நேர்கிறது. இதேபோல ஜீவா -ப்ரியா ஜோடி திருமணம் செய்துக் கொள்கிறது. முன்னதாக ஜீவாவை காவ்யா காதலித்த நிலையில் ஜோடி மாறி நடைபெற்ற இந்தத் திருமணங்கள் அவர்களது வாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

நடக்காமல் போகும் 60ம் கல்யாணம்
இந்த இரண்டு ஜோடிகளும் ஒருவரை ஒருவர் விரும்பத்துவங்கும் வகையில் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும், தங்களது முந்தைய காதலை நினைத்து ஜீவா மற்றும் காவ்யா இருவரும் மற்றவர்களுடன் இணைவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தனர். இதனிடையே ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோரின் 60ம் கல்யாணம் நடக்காமல் போவதற்கு காவ்யா காரணமாகிறார். அவரை காரணமாக மாற்றுகிறார் அவரது மாமியார்.

வில்லத்தனம் செய்யும் மாமியார்
அவர் தன்னுடைய மகன் பார்த்தியுடன் இணைந்து வாழாமல் இருப்பதை கண்டறியும் அவர், காவ்யாவை தன்னுடைய மகனின் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றிவிட்டு அவருக்கு புதிதாக ஒருவரை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் காவ்யாவை அனைவரும் வெறுக்கும் வகையில் அவர் கொடுத்துவிட்டு சென்ற தாலியை மறைக்கிறார்.

காவ்யாவை வெறுக்கும் பார்த்தி
இதையடுத்து அனைவரின் முன்னிலையிலும் அவமானத்திற்கு உள்ளாகும் பார்த்தி, காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார். இதனிடையே, காவ்யாவை பார்த்தி வெறுப்பதற்காகத்தான் தாலியை தான் மறைத்ததாகவும் பார்த்தியின் வாழ்க்கையை விட்டு காவ்யா போக வேண்டும் என்றும் அவரது மாமியார் கூறுவதாக தற்போதைய புதிய ப்ரமோ காணப்படுகிறது.

பார்த்தியை விட்டு விலகச்சொல்லும் மாமியார்
பார்த்தி தற்போது காவ்யாவை முழுமையாக வெறுக்கும் நிலையில், பார்த்தி தேடினாலும் கிடைக்காத தூரத்திற்கு காவ்யா செல்ல வேண்டும் என்றும் அப்போதுதான் பார்த்திக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும் என்றும் தன்னுடைய மாமியார் கூறுவதைக் கேட்டு காவ்யா, பரிதவிப்புடன் அவரை பார்க்கிறார்.