ஆழமான நிசப்தத்திற்கு செல்லும் இதயம்... வருடும் ரஹ்மான் இசை... உருகிய டிடி

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக காணப்படுகிறார் டிடி.

Recommended Video

ஆழமான நிசப்தத்திற்கு செல்லும் இதயம்... வருடும் ரஹ்மான் இசை... உருகிய டிடி

இவர் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பவர் பாண்டியில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் டிடி அவ்வப்போது பல வீடியோக்கள், புகைப்படங்கள், போட்டோஷுட்களை பகிர்ந்து வருகிறார்.

பன்முகத் திறமையாளர் டிடி

பன்முகத் திறமையாளர் டிடி

தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பன்முகம் காட்டி வருகிறார் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் பல முன்னணி நடிகர்களின் பேட்டிகள் மற்றும் புதிய படங்களின் இசை வெளியீடுகள் என தொகுத்து வழங்கி தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். மேலும் பல ஹீரோக்களின் ஆஸ்தான தொகுப்பாளராகவும் உள்ளார்.

பிரபலங்களின் விருப்பம்

பிரபலங்களின் விருப்பம்

டிடி பேட்டி எடுக்கிறார் என்றால் நினைத்ததை காட்டிலும் மிகவும் சிறப்பாக அந்த பேட்டி அமைந்து விடும். மேலும் கலகலப்பாகவும் இருக்கும். இந்தக் காரணங்களாலேயே டிடிக்கு பேட்டியளிக்க முன்னணி நடிகர்கள் விருப்பம் காட்டுவார்கள். அவர்கள் சொல்ல நினைத்ததை விட அதிகமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொண்டு வருவார் டிடி.

படங்களில் நடிக்கும் டிடி

படங்களில் நடிக்கும் டிடி

தற்போது படங்களிலும் இவரை காண முடிகிறது. தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்திருந்த பவர் பாண்டி படத்தில் ரேவதிக்கு மகளாக நடித்திருந்தார் டிடி. இந்தப் படத்தில் சிறிய கேரக்டர் என்றாலும் அவரது கேரக்டர் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள், தொகுப்பாளர் பணி என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் டிடி.

சுந்தர் சி படத்தில் டிடி

சுந்தர் சி படத்தில் டிடி

சுந்தர் சி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். சுந்தர் சி, ஜெய், ஜீவா உள்ளிட்டவர்களுடன் இவர் இணைந்திருந்த இந்தப் படத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் டிடி பகிர்ந்திருந்தார். மேலும் சமீபத்தில் பீஸ்ட் படத்திற்கு சூப்பரான ஆட்டம் போட்டு அதையும் பகிர்ந்திருந்தார்.

டிடி இன்ஸ்டாகிராம் பதிவு

டிடி இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில் தற்போது ஒரு நாள் சிரித்தேன் என்ற ஏஆர் ரஹ்மானின் பாடல் வரிகளுக்கு மௌமான நடை பழகி அதை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் எப்பொழுதெல்லாம் இதயம் ஆழமான நிசப்தத்திற்கு செல்கிறதோ, அப்பொழுது அங்கு வருடும் ரஹ்மானின் இசை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

சிறப்பான தொகுப்பாளர், நடிகை என பன்முகங்களை கொண்ட டிடி, இதுபோன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லைக்ஸ்களும் அள்ளுகிறது. அதேபோல இவருக்கு ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் என எந்த லுக்கும் சிறப்பாக அமைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X