Don't Miss!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்... எப்ப ஆரம்பிக்குதுன்னு பாருங்க
சென்னை : விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியும் ஒன்று.
இந்த நிகழ்ச்சியின்மூலம் பல பிரபலங்கள் உருவாகி தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றனர்.
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சி மீண்டும் துவங்கவுள்ளதாக விஜய் டிவி பிரமோ வெளியிட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்குப்பின் பாமக நிறுவனர் ராமதாஸ் பார்த்த படம் தங்க மீன்கள்.. என்ன சொன்னாரு தெரியுமா?

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமான நடிகர்களாக சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 2015ல் துவங்கி தற்போது 8 சீசன்களை கடந்துள்ளது.

முகவரி கொடுத்த நிகழ்ச்சி
ரோபோ சங்கர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியின் பட நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிகிறது. முன்னதாக விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்தும் வழங்கி வந்தார். இதனிடையே தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

தொடர் பிரமோக்கள்
அடுத்தடுத்த பிரமோக்களால் விஜய் டிவியின் ட்விட்டர் தளமே அல்லோல கல்லோல பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மிகுந்த குஷியாக்கி உள்ளது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இந்த நிகழ்ச்சியை மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காமெடியன்களை கண்டுகளிக்க அவர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.

சிறப்பான நடுவர்கள்
நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கவுள்ள அர்ச்சனாவிற்கு தனியாக அறிமுகம் தேவையில்லை. இவரும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக உள்ளார். படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2020ல் பிக் பாசில் இவர் பங்கேற்றார். தொடர்ந்து சிங்கப்பெண்ணே, நமம வீட்டு திருவிழா உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மதுரை முத்து, ரோபோ சங்கரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

ஓடிடியிலும் வெளியீடு
இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாக உள்ளது. தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள பிரமோவில் இன்னும் இரண்டே நாட்களில் நம்ம பாய்ஸ் வராய்ங்க என்று தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த பிரமோக்களை பார்க்கும்போது காமெடி கலாட்டக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது என்பதை அறிய முடிகிறது.

சிறப்பான சிவகார்த்திகேயன்
விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான சிரிப்பு அனுபவத்தை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த அறிமுகத்தாலேயே வெள்ளித்திரையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து தற்போது சிறப்பான ஹீரோ, தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களுடன் கோலிவுட்டில் வலம் வருகிறார்.