Neeya naana :பிரியாணி சாப்பிடவே பாதி மாச சம்பளம் போயிடுது.. நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம்!

சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சக்சஸ்புல்லாக கோபிநாத் ஒரே ஆங்கராக வழிநடத்தி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் சக்சஸிற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான பல விவாதங்களை இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வாரமும் வித்தியாசமான மற்றும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான தலைப்புடனேயே இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அணுகியுள்ளது.

Vijay TVs Neeya naana show new promo makes fans more interesting

பிரியாணி பட்ஜெட் -நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம் :

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக நீயா நானா இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சுவாரஸ்யமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு விஷயத்தில் இருவேறு கருத்துக்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு மற்றொரு காரணமாக இந்த நிகழ்ச்சியின் ஒரே ஆங்கராக கோபிநாத் தொடர்ந்து இருந்து வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான பங்காக இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான தலைப்புகளுடனேயே இந்த நிகழ்ச்சியை கொடுத்துவரும் கோபிநாத், இந்த வாரமும் சுவையான தலைப்புடனேயே நிகழ்ச்சியை கொடுத்துள்ளார். இதற்கான ப்ரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விதவிதமான பிரியாணி சமைப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என இந்த வார தலைப்பை சுவாரஸ்யமான விவாதமாக கொண்டு சென்றுள்ளார் கோபிநாத்.

ஒவ்வொரு மாதமும் 5 முதல் 7 ஆயிரம் ரூபாயை பிரியாணிக்காகவே செலவிடுவதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஒரு கல்லூரி மாணவர், சம்பாதித்துக் கொண்டே, படிப்பதாகவும் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதில் பாதி சம்பளம் பிரியாணி சாப்பிடுவதற்கே செலவாவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மாதாந்திர பட்ஜெட்டில், உணவுக்கான பட்ஜெட் என்பது போல பிரியாணி பட்ஜெட் என்பது உருவாகியுள்ளதாகவும் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டின் விதவிதமான பிரியாணி வகைகள் குறித்தும் நிகழ்ச்சியில் பகிரப்பட்டுள்ளது. சில பிரியாணி வகைகள், காட்சிப்படுத்தப்பட்டும், பங்கேற்பாளர்களுக்கு ருசிக்கவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், சேமியா சிக்கன் பிரியாணி, வரகரிசி வாழைப்பூ வெஜ் பிரியாணி, பாம்போ பிரியாணி, வான்கோழி பிரியாணி போன்ற பிரியாணி வகைகள் குறித்து பிரியாணி சமைப்பவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். இதில் வித்தியாசமாக கேக் பிரியாணி என்ற புதிய வகை பிரியாணி குறித்தும் விவாதத்தில் பேசப்பட்டது.

Vijay TVs Neeya naana show new promo makes fans more interesting

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியை ஆங்கர் கோபிநாத், அழகாக கொண்டு செல்வதும், அதில் அழகான முறையில் பங்கேற்பாளர்களை பேச வைப்பதும், இருதரப்பினரையும் சரியான முறையில் வழிநடத்துவதும் என கோபிநாத்தின் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் சிறப்பாக்கி வருகிறார். அந்த வகையில், பிரியாணி காதலர்கள், பிரியாணி சமைப்பவர்கள் என கலவையான பங்கேற்பாளர்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. அவர்கள் விதவிதமான பிரியாணி வகையில் சுவைப்பதை நாமும் சப்புக் கொட்டிக் கொண்டே பார்க்க முடிவது இந்த ஷோவின் சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X