பிரியாணி சாப்பிடுவதற்காகவே இந்தியா முழுவதும் சுற்றியவர்... அதிர்ச்சியில் கோபிநாத்
சென்னை : விஜய் டிவியில் நீயா நானா ஷோ, கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பான வரவேற்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த வாரத்தின் நிகழ்ச்சி குறித்த புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக உள்ளது நீயா நானா. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது.

தொகுப்பாளர் கோபிநாத்
இந்த நிகழ்ச்சி கோபிநாத்திற்கு சிறப்பான வரவேற்பை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன்மூலம் விஜய் டிவி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை அவர் குவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்குவது குறித்து அவர் பல சமயங்களில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் வெற்றி
இந்த நிகழ்ச்சியை தனது சாமர்த்தியமான சொல்லாடலால் அவர் சிறப்பான எடுத்து செல்கிறார். அதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். இரு பக்கங்களில் அமர்ந்திருக்கும் போட்டியாளர்கள் சிறப்பான விவாதத்தை மேற்கொள்ள கோபிநாத் உதவியாக இருக்கிறார்.

புதிய ப்ரோமோ வெளியீடு
உணவை தேடித் தேடி உண்பவர்கள் மற்றும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் தருவது ஒழுங்கில்லை என்பவர்கள் என்ற தலைப்பில் நாளைய தினம் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிறு பகல் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.

உணவிற்கான பயணம்
இந்த பிரமோவில் அதிகாலை 3 மணிக்கு பிரியாணி தேடி சென்று உண்ணும் ஒரு நபர், பிரியாணி சாப்பிடுவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்வதாக கூறுகிறார். பீகார், அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா போன்ற இடங்களுக்கு அவர் பயணித்ததாக தெரிவிக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார் கோபிநாத்.


Click it and Unblock the Notifications