Neeya naana : எமோஷனல் லேபர்.. நீயா நானாவில் பேசப்பட்ட கான்செப்ட்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
சென்னை : விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியாக நீயா நானா கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஒரே ஆங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருவதுதான். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் வெற்றிகரமான தொகுப்பாளராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.
இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்தித்துள்ளது. திருமணம் வேண்டாம் என சொல்லும் பெண்கள் மற்றும் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் என்பதுதான் இந்த வார விவாதத்திற்கான தலைப்பாக காணப்படுகிறது.

எமோஷனல் லேபர் குறித்து பேசிய நீயா நானா ஷோ : விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக அடுத்தடுதத எபிசோட்களை வழங்கி வருகிறது நீயா நானா ஷோ. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சிறப்பம்சம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரே தொகுப்பாளர் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியை கோபிநாத் தொடர்ந்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இத்தனை ஆண்டுகளில் எத்தனை விதமான தலைப்புகளில் அவர் ரசிகர்களை சந்தித்துள்ளார் என்பது அவருக்கே கணக்கு தெரியுமா என்பது தெரியாது.
இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன்தான் அவர் ரசிகர்களை சந்தித்துள்ளார். திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் மற்றும் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் என்பதுதான் இந்த வாரத்தின் சுவாரஸ்யமான தலைப்பாக காணப்படுகிறது. இந்தத் தலைப்பில் அவரவர் தரப்பு நியாயங்கள் சிறப்பான வகையில் பேசப்பட்டன. அதை கோபிநாத்தும் ஒப்புக் கொண்டு பேசினார். ஆண்கள் தரப்பில் தாங்களும் டொமஸ்டிக்காக பெண்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருமணம் வேண்டாம் என்று கூறிய பெண்களின் கருத்துக்கள் ஆமோதிக்கப்பட வேண்டியதாக இருந்தது.

ஆனால் இதையடுதது பேசிய பெண் ஒருவர் அனைவருக்கும் தெரிந்த ஆனால் அதிகமாக பேசப்படாத கான்செப்ட் குறித்து பேசியது அனைவரையும் கவர்ந்தது. கோபிநாத்தையும்தான். டொமஸ்டிக் லேபர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு குடும்பத்திற்கு எமோஷனல் லேபரும் முக்கியமானது என்று அவர் பேசினார். ஒரு குழந்தை இருந்தால், அதை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும், அதன் பேரண்ட் -டீச்சர் மீட்டிங் முதல்கொண்டு ஒரு பெண்தான் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்யுள்ளதாகவும் அவர் பேசினார்.
வீட்டில் ஒரு புளி தீர்ந்துவிட்டால்கூட அதை ஒரு பெண்தான் நியாபகம் வைத்துக் கொண்டு வாங்க வேண்டியது உள்ளது என்றும் இதிலெல்லாம் ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் அவர் பேசினார். தொடர்ந்து பேசிய கோபிநாத், இது இதுவரை யாரும் பேசாத விஷயம் என்பதை ஒப்புக் கொண்டார். ஒரு வீட்டில் கேஸ் தீர்வது முதற்கொண்டு அனைத்தையும் ஒரு பெண் நியாபகம் வைத்துக் கொண்டு அதை புக் செய்ய வேண்டியுள்ளதாக அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அந்தப் பெண், ஒரு பெண் அவரது வேலையையும் பார்த்துக் கொண்டு, புரொபஷனல் வேலையையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, இதுபோன்ற ஒவ்வொரு வீட்டின் நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் பேசினார். ஒரு பெண் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்பட்சத்தில் கிடைக்கும் சிறிய இடைவெளியில் அடுதத வேளைக்கு என்ன சமைப்பது என்பது குறித்து யோசிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதைதொடர்ந்து பேசிய கோபிநாத், நாம் அனைவரும் இந்த விஷயத்தை கிண்டலாகவே பார்த்து பழகிவிட்டதாகவும் ஆனால் ஒவ்வொரு வேளைக்கு என்ன சமைப்பது என்பதை யோசிப்பது என்பது மிகவும் கடினமானது என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களையும் யோசிக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு காணப்படுவதாகவும் இதுகுறித்து ஆண்கள் என்ன மாதிரியான மனநிலையுடன் இருக்கிறார்கள் என்பதும் யோசிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











