For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தங்கச்சிக்காக இந்த அளவுக்கு தியாகம் செய்யணுமா... விஜய் டிவியின் புதிய சீரியல்

    |

    சென்னை : விஜய் டிவியில் புதுப்புது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் எப்போதுமே ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட். இதேபோல சீரியல்களும் விஜய் டிவியில் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

    அடிதூள்...பீஸ்ட் மொத்த அப்டேட்டும் வந்தாச்சு...அடுத்து என்ன வரப்போகுது தெரியுமா? அடிதூள்...பீஸ்ட் மொத்த அப்டேட்டும் வந்தாச்சு...அடுத்து என்ன வரப்போகுது தெரியுமா?

    விஜய் டிவி சீரியல்கள்

    விஜய் டிவி சீரியல்கள்

    விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகின்றன. டிஆர்பியில் எப்போதுமே முதலிடத்தை பெற்று வருகின்றன. பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி என ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் சீரியல்கள் விஜய் டிவியில் அதிகம்.

    டிஆர்பியில் சறுக்கல்

    டிஆர்பியில் சறுக்கல்

    ஆனால் சமீப காலங்களில் டிஆர்பியில் சன் டிவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் டிவியின் கயல், ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் முதலிடங்களை பிடித்து வருகின்றன. இதனால் முதலிடத்தை பிடிக்கும் போட்டியில் அடுத்தடுத்து புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது விஜய் டிவி.

    புதிய தொடர்

    புதிய தொடர்

    இந்நிலையில் தற்போது சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இரண்டு சகோதரிகளுக்கிடையிலான பாசக்கதை என்று ப்ரமோவில் தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோ ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    யாரும் செய்யாத தியாகம்

    யாரும் செய்யாத தியாகம்

    தன்னுடைய வாழ்க்கைக்காக தன்னுடைய அக்காவை தியாகம் செய்ய சொல்கிறாள் தங்கை. தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு தங்கைக்காக இதை ஏற்கிறாள் அக்கா. ஏனென்றால் தான் அவளுக்கு அக்கா மட்டுமில்லை. அம்மாவும்கூட என்று கூறுகிறார்.

    தங்கைக்காக விபரீத முடிவு

    தங்கைக்காக விபரீத முடிவு

    ஆனால் அவள் செய்யும் தியாகம் எந்த ஒரு பெண்ணுமே நினைத்து பார்க்க முடியாதது. தன்னுடைய தங்கைக்காக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்யும் நிலை அக்காவிற்கு ஏற்படுகிறது. இவ்வாறு சிப்பிக்குள் முத்து தொடரில் ப்ரமோவில் காணப்படுகிறது.

    விஜய் டிவியின் சிறப்பான முயற்சி

    விஜய் டிவியின் சிறப்பான முயற்சி

    விஜய் டிவியின் முக்கிய தொடரான பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா மாற்றப்பட்ட நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. ஆனால் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான கதைக்களங்களுடன் டிஆர்பியில் முன்னேறியுள்ளது. இதனிடையே அடுத்தடுத்த தொடர்களால் ரசிகர்களை கவர விஜய் டிவி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    English summary
    Vijay TV's new serial Chippikkul Muthu new promo released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X