விஜய் டிவியின் புதிய சீரியல்... நடிகர்கள் குறித்து சீக்ரெட்டாக வைத்துள்ள படக்குழு

சென்னை : அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி சீரியல்களுக்கும் பெயர் போனது விஜய் டிவி.

ரசிகர்களை தொடர்ந்து தங்களது சேனலை பார்க்க வைக்கும்வகையில் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்து செல்கிறது.

இந்நிலையில் சேனலில் புதிய சீரியலுக்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் அடுத்தடுத்த சிறப்பான பல நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கட்டிப் போட்டு வருகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளில் எவ்வாறு வித்தியாசமான டாஸ்க்குகளை கொண்டுவந்து ரசிகர்களை கவரலாம் என்பதிலும் விஜய் டிவி கவனமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்களிலும் கெத்து

தொடர்களிலும் கெத்து

நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி தொடர்களில் விஜய் டிவியை அடித்துக் கொள்ள ஆளில்லை. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என அடுத்தடுத்த தொடர்களில் ரசிகர்கள் கட்டுண்டு இருக்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களையும் விஜய் டிவி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

சிறப்பான சீரியல்கள்

சிறப்பான சீரியல்கள்


ரசிகர்கள் இந்த தொடர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை பொறுத்து சீசன் 1, 2 என தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. இந்த தொடர்களில் மற்ற சீரியல்கள் போலில்லாமல் சேலஞ்சிங் கதாபாத்திரங்களையும், வெற்றியை நோக்கி செல்லும் கதாபாத்திரங்களையும் முதன்மை படுத்தி வருகிறது.

பிரபல படங்களில் தலைப்புகள்

பிரபல படங்களில் தலைப்புகள்

எப்போதும் பிரபல படங்களில் தலைப்புகளில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதன்மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிப்பிக்குள் முத்து என்ற புதிய தொடரை விஜய் டிவி விரைவில் ஒளிபரப்ப உள்ளது. இதற்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இதன் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிப்பிக்குள் முத்து தொடர்

சிப்பிக்குள் முத்து தொடர்

விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடர் திடீரென நிறுத்தப்பட்டுள்ள இந்நிலையில் அந்த ஸ்லாட்டில் சிப்பிக்குள் முத்து என்ற தொடர் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் குறித்த தகவல்களை விஜய் டிவி ரகசியமாக வைத்துள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் ஒளிபரப்பாகும் நேரம், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவை குறித்து விரைவில் பிரமோக்கள் மூலம் விஜய் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் நடிப்பில் வெளியான சிப்பிக்குள் முத்து படத்தின் கதையை இந்தப் படம் ஒத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X