விஜய் டிவியின் அண்டாகாகசம்.. புதிய கேம் ஷோ.. பாக்க தயாரா.. ப்ரமோவே மிரட்டுதே!
சென்னை : விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சில மாதங்களில் துவங்கவுள்ளது.
இதனிடையே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை விஜய் டிவி களமிறக்கி வருகிறது. சமீபத்தில் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த சேனலின் பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த சீசன்களை கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டுவரும் நிலையில், அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகிறது.

ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி
அந்த வகையில் சமீபத்தில் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி சிறப்பான துவக்கத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக தன்னுடைய ஒளிபரப்பை மேற்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடிகை அமலா பால் கலந்துக் கொண்டு தன்னுடைய காதல் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்
இதையடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்த சேனலில் களைகட்டி வருகின்றன. சேனலில் சீரியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டாலும் முதல் சாய்சாக நிகழ்ச்சிகளுக்கே இந்த சேனலில் முன்னுரிமை தரப்பட்டு வருகின்றன.

புதிய கேம் ஷோ
இதனிடையே அடுத்ததாக அண்டாகாகசம் என்ற நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சி புத்தம்புதிய கேம் ஷோவாக அமையவுள்ளது. வரும் 14ம் தேதி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு வாரந்தோறும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் ப்ரமோவை தற்போது வெளியிட்டுள்ளது.

மிரட்டலான புதிய ப்ரமோ
இதன்படி அண்டாகாகசம் என்ற இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை லட்சத்திற்கு வேண்டுமானாலும் பொருட்களை எடுத்துவந்து குறிப்பிட்ட இடத்தில் போட்டியாளர்கள் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் அந்தப் பொருட்கள் அவர்களுக்கே சொந்தம்.

மாகாபா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்கவுள்ள நிலையில், முதல் வாரத்தில் நக்ஷத்ரா, ரேஷ்மா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளது ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. போட்டியாளர்கள் எதையோ டிஸ்கஸ் செய்வதும் தொடர்ந்து டிவி உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட கட்டத்தில் வைப்பதுமாக நிகழ்ச்சி களைகட்டுகிறது.


Click it and Unblock the Notifications











