Pandian stores 2 serial: பரோட்டா சாப்பிட்டது ஒரு குத்தமாய்யா.. பாண்டியன் இந்த திட்டு திட்டுறாரு!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் பாண்டியனை டெரராக காட்டும் வகையில் அமைந்திருந்தது. டியூஷன் விவகாரத்தை பாண்டியனிடம் கூறும்படி ராஜி தொடர்ந்து கேட்க, நேரம் பார்த்து கூறுவதாக கோமதி உறுதியளிக்கிறார். ஆனால் அதற்குள்ளாக தங்கமயில் பாண்டியனிடம் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என்று ராஜி மட்டுமில்லாமல் மீனாவும் பரிதவிக்கிறார்.
இதனிடையே அன்றைய நாள் முழுவதும் சரியாக இல்லை என்று வீட்டிற்குள் வரும்போதே கடுப்புடனும் ஆத்திரத்துடனும் வருகிறார் பாண்டியன். அவர் மிகுந்த கோபத்துடன் இருப்பதாகவும் யாரும் அவர் அருகில் சென்றால் கடித்து வைத்து விடுவார் என்றும் பழனிவேல் கூற, டியூஷன் விவகாரத்தை மறுநாள் காலை கூறுவதாக கோமதி ராஜியிடம் கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை அடுத்தடுத்த காட்சிகளின்மூலம் கவரும்வகையில் அமைந்திருந்தது. ராஜியின் ஹோம் டியூஷன் விவகாரத்தை பாண்டியனிடம் கூறி சம்மதம் வாங்கும்படி ராஜியும் மீனாவும் தொடர்ந்து கோமதியிடம் கேட்கின்றனர். ஆனால் வந்தவுடன் எப்படி கேட்பது நேரம் பார்த்து கேட்கிறேன் என்று கோமதி கூறுகிறார். ஆனால் வீட்டிற்குள் வரும்போதே மிகுந்த கோபத்துடன் காணப்படுகிறார் பாண்டியன். அன்றைய தினம் எதுவுமே சரியாக அமையவில்லை என்று அவர் கடுப்புடன் கூறுகிறார்.
கோமதி சமைத்த உப்புமா: பணம் கொடுப்பவர்கள் யாரும் கொடுக்கவில்லை என்றும் அனைத்தையும் தானே கவனிக்க வேண்டியுள்ளதாகவும் யாரும் போன் போட்டுக்கூட கேட்பதில்லை என்றும் பாண்டியன் கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து செந்தில் பேச முயல, அவரை தோளில் அமுக்கி அடக்குகிறார் மீனா. தொடர்ந்து எல்லாம் சரியாகிவிடும் என்று பாண்டியனையும் சமாதானப்படுத்துகிறார். இதனிடையே, இரவு உணவுக்கு உப்புமா செய்து வைக்கிறார் கோமதி. தன்னை சமைக்க விடவில்லை, விட்டிருந்தால் விதவிதமாக சமைத்திருப்பேன் என்று தங்கமயில் இடையில் புகுந்து கூறுகிறார். இதையடுத்து ரவை அதிகமாக இருந்ததால் உப்புமா செய்ததாக கோமதி கூறுகிறார்.
திருட்டுத்தனமாக பரோட்டா: இதனிடையே, அனைவரும் பரோட்டா சாப்பிடலாமா என்று பழனிவேல் கேட்க, ஏன் துரைக்கு உப்புமா இறங்காதா என்று பாண்டியன் கோபத்துடன் கேட்கிறார். சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால் அந்த உப்புமாவின் அருமை தெரியும் என்றும் அவர் கூறுகிறார். இதையடுத்து கதிரை பரோட்டா வாங்கி வருமாறு பழனிவேல் கூறுகிறார். அவரும் வாங்கிவர அண்ணன் தம்பிகள், பழனிவேல் என அனைவரும் மொட்டை மாடியில் யாருக்கும் தெரியாமல் அதை சாப்பிடுகின்றனர். அப்போது அங்குவரும் ராஜி மற்றும் மீனா இருவரும் அவர்களை பார்த்து முறைக்க, உப்புமா இறங்கவில்லை என்று கூறி பழனிவேல் சமாளிக்கிறார். இதனால் அவர்கள் சிரித்தபடி அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அங்குவரும் தங்கமயில், கடைப்பலகாரத்தை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும் மாமா வேண்டாம் என்று கூறியும் பரோட்டா வாங்கி சாப்பிடுகிறீர்களே என்று கூறி, சரவணனிடம் இருந்து அதை பிடுங்கி வைத்துவிட்டு அவரை அழைத்து செல்கிறார். கீழே போய் பாண்டியனிடமும் போட்டுக் கொடுக்கிறார். இதையடுத்து மொட்டை மாடிக்கு வரும் பாண்டியன் அனைவரையும் பரோட்டா தின்பதற்கு ஆத்திரத்துடன் திட்டுகிறார். சம்பாதிக்கும் திமிரில் கதிர் பரோட்டா வாங்கி வந்ததாக கூறி அவரையும் அதிகமாக திட்டுகிறார். மீனா, ராஜிக்கும் திட்டு விழுகிறது.
ஹோம் டியூஷன் விவகாரம்: இதனிடையே, மறுநாள் காலை கோயிலுக்கு சென்றுவிட்டு வரும் தங்கமயில் வழியில் பாண்டியனை பார்த்துவிட்டு உடன் செல்கிறார். பாண்டியன் தங்கமயிலின் தங்கையின் படிப்பு குறித்து விசாரிக்க, பதிலுக்கு பேச்சுவாக்கில் அப்படியே ராஜி ஹோம் டியூஷன் எடுக்கவிருப்பதையும் போட்டுக் கொடுக்கிறார் தங்கமயில். அத்தை சொல்லியிருப்பார்கள் என்று நினைத்ததாகவும் அவர் கூற, சமீப காலங்களில் கோமதி, தன்னிடம் அனைத்து விஷயங்களையும் மறைப்பதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதனிடையே, தான் அவ்வளவு கூறியும் ராஜி மீண்டும் டியூஷன் எடுக்கவிருப்பதை கேட்டு அவரது ஆத்திரம் மிகவும் அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications











