Saravana Vickram :பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புதிய சந்தோஷம்.. காஸ்ட்லி கார் வாங்கிய கண்ணன்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை வழங்கி வருகிறது.

இந்தத் தொடர் அந்த சேனலின் டிஆர்பியின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நான்கு அண்ணன் -தம்பிகளின் வாழ்க்கையை சொல்லும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. இதில் கடைக்குட்டியாக கண்ணன் கேரக்டர் காணப்படுகிறது.

Vijay TVs Pandian stores actor Saravana vickram owned new costly car

காஸ்ட்லி காரை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் :விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலில் டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் நான்கு அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமை மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருமணம் மற்றும் மொய் வைப்பதில் ஏற்படும் குளறுபடியால் ஏற்படும் பிரிவு ஆகியவை கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 4 அண்ணன் -தம்பிகளும் தற்போது 3 குடும்பங்களாக பிரிந்துள்ளனர்.

இந்தத் தொடரில் மாமனார் வீட்டோடு தங்கிவிட்ட ஜீவா, தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் திண்டாடுகிறார். மனதிற்குள் புகைந்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய மனைவியிடம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். தன்னுடைய மாமனாரிடம் அவர் எந்தவிதமான புது முயற்சியை பகிர்ந்தாலும் அதற்கு முட்டைக்கட்டை போடுகிறார். இதனால் அங்கு தங்கவே பிடிக்காத நிலையில் ஜீவா காணப்படுகிறார்.

Vijay TVs Pandian stores actor Saravana vickram owned new costly car

இந்நிலையில் தனிக்குடித்தனம் போன கண்ணன், தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் வைத்து வீட்டிற்கு தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்கிப் போடுகிறார். ஐஸ்வர்யாவின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு அவர் நடந்துக் கொள்கிறார். இதனால் மருத்துவ செலவுகளுக்கு கூட பணமில்லாமல் தன்னுடைய அண்ணன் கதிரிடம் கடன் வாங்குகிறார். தொடர்ந்து தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த தேவையான பொருட்களை வாங்கவும் அவர் கதிரிடம் பணம் வாங்குகிறார்.

ஐஸ்வர்யா சொல்லிதான் அவர் இவ்வாறு நடந்துக் கொள்கிறார். இதை கேள்விப்படும் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் கண்டிக்கின்றனர். தனிக்குடித்தனம் நடத்துவதாக சவால் விட்டுவிட்டு வந்த அவர்கள் ஏன் கதிரிடம் பணம் வாங்க வேண்டும் என்று அவர்கள் கோபத்துடன் கேட்கின்றனர். இதையடுத்து கூனிக்குறுகும் கண்ணன், இனிமேல் அப்படி நடந்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியளிக்கிறார்.

Vijay TVs Pandian stores actor Saravana vickram owned new costly car

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனாக நடித்துவரும் சரவண விக்ரம் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த துணை கேரக்டருக்கான விருதை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய கார் வாங்கிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்துள்ளார். இந்தக் கார் மிகவும் காஸ்ட்லியாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X