மீண்டும் ஐஸ்வர்யாவாக களமிறங்கும் அதே நடிகை.. சாய் காயத்ரிக்கு பதிலாக தீபிகா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் 4 அண்ணன் -தம்பிகளின் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச் செல்கிறது.
அண்ணன் -தம்பிகள் நால்வர் மற்றும் அவர்களின் மனைவிகள், குழந்தைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொடுத்து வருகிறது.
நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவாக சிறப்பான நடிப்பை கொடுத்துவந்த சாய் காயத்ரி தற்போது தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகள் 4 பேர்களின் ஒற்றுமை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் கூட்டுக் குடித்தனம் செய்வதற்கு ஏற்படும் தடைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவையும் கதைக்களங்களாக அமைந்துள்ளன.

அண்ணன் -தம்பிகள் பாசம்
அடுத்தடுத்த பிரச்சினைகளால், தங்களது வீடு, கடையை இழக்கும் அண்ணன் -தம்பிகள், தங்களது ஒற்றுமையை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். சிறிய வீட்டில் தங்களை அடைத்துக் கொள்கின்றனர். ஆனாலும் நம்பிக்கையுடன் சிறிய கடையை நடத்தி, சொந்தமாக வீடு கட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து சிறிய மனஸ்தாபங்களும் வராமல் இல்லை.

மன உளைச்சலில் ஜீவா
குறிப்பாக கண்ணன், கதிர் ஆகியோர் தங்களது சொந்த சம்பாத்தியத்தில் தங்களது தேவைகளை தாங்களே பார்த்துக் கொள்ளும்போது, அண்ணன் மூர்த்தியின் கீழ் கடையில் வேலை செய்யும் ஜீவா மட்டும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அண்ணனின் கையை எதிர்பார்த்து இருப்பது அவருக்கும் அவரது மனைவி மீனாவிற்கும் மிகுந்த மன உளைச்சலை தருகிறது. அதற்கு ஏற்றாற்போல மூர்த்தியும், பணத்தை அள்ளிக் கொடுக்காமல், கிள்ளிக் கொடுப்பது அவர் மீது ரசிகர்களுக்கே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

சிறப்பான ப்ரமோ வெளியீடு
தன்னுடைய மச்சினிச்சியின் திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்லும் ஜீவா, காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அண்ணனிடம் பணம் கேட்க, வழக்கம்போல அவர் கிள்ளியே கொடுக்கிறார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக தற்போதைய ப்ரமோ காணப்படுகிறது. இதனால் கதையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகை சாய் காயத்ரி விலகல்
இதனிடையே, இந்தக் கதையில் கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யாவாக நடித்துவந்த சாய் காயத்ரி தற்போது கதையில் இருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இனிவரும் எபிசோட்களில் தன்னுடைய கேரக்டர் தனக்கு சிறப்பாக அமையும் நிலையில் இல்லை என்பதாலும், இதனால் தன்னுடைய கேரியர் பாதிக்கும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி மெசேஜ் வெளியிட்ட நடிகை
தன்னுடைய முடிவிற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்ட விஜய் டிவிக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது ஐஸ்வர்யா கேரக்டரில் மீண்டும் தீபிகா இணையவுள்ளார். இவர் முன்னதாக இதே கேரக்டரில் நடித்தவர். இடையில் இவர் விலகியபின்பே, சாய் காயத்ரி அந்த கேரக்டரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











