Pandian stores :காவல் நிலையத்தில் வாடும் கதிர்.. வங்கி நிர்வாகம் வைக்கும் டிமாண்ட்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

தற்போது கண்ணனுக்காக வங்கி ஊழியர்களை அடிக்கும் கதிரை, போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கண்ணனின் ஊதாரித்தனத்தால் இந்த நிலைமை கதிருக்கு வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மற்றவர்கள் அனைவரும் நிலைக்குலைந்து போயுள்ளனர்.

Vijay TVs Pandian stores new promo and episodes makes everyone more happy

கதிரை விடுவிக்க வங்கி வைத்த டிமாண்ட் :

விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. நான்கு அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது, இவர்கள் மூன்று குடும்பங்களாக மாறியுள்ளனர். இதில் ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் அண்ணன்களுடன் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கதிர் மட்டும் தன்னுடைய அண்ணன் மூர்த்தியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஊதாரித்தனமாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி வீடு முழுக்க தேவையான, தேவையில்லாத பல பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதனால் வங்கி ஊழியர்கள், கிரெடிட் கார்ட் பில்லை கட்டச் சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்கின்றனர். ஒரு கட்டத்தில், ஐஸ்வர்யாவை அசிங்கமாக பேசும் அவர்கள், கண்ணனையும் அடித்து துவைக்கின்றனர். இதை கேள்விப்படும் கதிர், வங்கி ஊழியர்களை பதிலுக்கு அடித்து கை கால்களை உடைக்கிறார்.

Vijay TVs Pandian stores new promo and episodes makes everyone more happy

இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் போட்டு, காவல்துறையினர் அவரை கைது செய்கின்றனர். இதனால் மூர்த்தி, ஜீவா மட்டுமில்லாமல் கண்ணனும் நிலை குலைந்துப் போகின்றனர். கதிரை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் அல்லோல கல்லோலப் படுகின்றனர். வங்கியில் போய், பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது, 5 லட்சம் ரூபாயை வங்கியில் கட்டினால், கேசை வாபஸ் வாங்குவதாக வங்கி அதிகாரி கூறுகிறார்.

இதனால் அண்ணன் -தம்பிகள் நிலைகுலைகின்றனர். உடனடியாக 5 லட்சத்தை புரட்டுவதற்கு மிகுந்த கஷ்டப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் தனம், முல்லை ஆகியோரும் தங்களது நகைகளை கொடுத்து உதவ, கதிரை கேஸ் இல்லாமல் வெளியில் கொண்டு வருகிறார் மூர்த்தி. இதையடுத்து, தன்னுடைய தம்பிகள் ஜீவா, கதிரை கட்டி அணைக்கிறார் மூர்த்தி. ஒருவழியாக பிரிவினையில் இருந்த இவர்கள், தற்போது இந்த பிரச்சினையாக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதனிடையே, தன்னுடைய தவறால், தனிமைப்பட்டு நிற்கும் கண்ணனையும், மற்ற சகோதரர்கள் பெருந்தன்மையுடன் சேர்த்துக் கொள்கின்றனர். இதனிடையே, தன்னுடைய அண்ணன் சிறையில் இருப்பதால், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவின் வளைகாப்பை கண்ணன் நிறுத்தியுள்ளார். இந்நிலையில், கதிர், வெளியில் வந்துள்ளதால், நின்று போன வளைகாப்பு மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X