கதிர் வேலைக்கு ஆப்பு வைத்த மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் காத்திருக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சிறப்பான பல கட்டங்களை கடந்து முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

விஜய் டிவியின் இந்தத் தொடர் டிஆர்பியில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. கூட்டுக்குடும்பத்தின் சிறப்பை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.

இந்தத் தொடரின் முக்கியமான திருப்பமாக கதிர் மற்றும் முல்லை குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். கடந்த 2018 அக்டோபர் 1ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 8 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவரும் 4 அண்ணன் தம்பிகள் குறித்த கதைக்களத்தை இந்த தொடர் ஒளிபரப்பி வருகிறது.

ஒற்றுமையான குடும்பம்

ஒற்றுமையான குடும்பம்

இந்தத் தொடரில் தனம், மூர்த்தி, மீனா, கதிர், முல்லை, கண்ணன் என அனைத்து கேரக்டர்களும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இவர்களை பிரிக்க பலரும் சதி வேலைகளை செய்துவந்த நிலையில், அவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து தங்களது ஒற்றுமையில் மிகவும் உறுதியாக இருந்து வருகின்றனர் இந்த அண்ணன் -தம்பிகள்.

குடும்பத்தை ஒருங்கிணைக்கும் தனம்

குடும்பத்தை ஒருங்கிணைக்கும் தனம்

இவர்கள் இப்படி ஒற்றுமையாக இருப்பதை காட்டிலும் வீட்டிற்குள் வாழ வந்த அனைத்து பெண்களும் அவர்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மூத்த மருமகளான தனம் அனைவரையும் சிறப்பாக ஒருங்கிணைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால் கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்தும்விதமாக கதிர் -முல்லை குடும்பத்தைவிட்டு பிரிகின்றனர்.

பிரிந்துபோன கதிர் -முல்லை

பிரிந்துபோன கதிர் -முல்லை

அவர்களை மீண்டும் குடும்பத்தில் இணைக்கும் மூர்த்தி, தனத்தின் முயற்சிகள் வீணாகின்றன. இதையடுத்து ஹோட்டலில் வேலை செய்கிறார் கதிர். அவர் அப்படி வேலை செய்வதை அவரது மாமியார் விரும்பவில்லை. அவர் கேவலமான வேலையில் சேர்ந்துள்ளதால் தன்னுடைய கௌரவம் குறைவதாக அவர் கருதுகிறார்.

கோபப்படும் முல்லையின் அக்கா

கோபப்படும் முல்லையின் அக்கா

இதேபோல அவரது மூத்த மகளும் தன்னுடைய தங்கை இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்வதை சுட்டிக் காட்டி தன்னுடைய பெற்றோரிடம் கோப்படுகிறார். தான் 10 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் அதை வைத்து கதிர் வியாபாரம் துவங்கட்டும் என்றும் அவர் கூறுகிறார்.

கதிர் வேலைக்கு ஆப்பு

கதிர் வேலைக்கு ஆப்பு

அப்போதே கதிர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று முல்லையின் அப்பா கூறுகிறார். ஆனால், இதை ஏற்காத முல்லையின் அம்மா, தன்னுடைய மருமகனை ஹோட்டலில் சென்று சந்தித்து ஏறுக்கு மாறாக பேசுகிறார். தொடர்ந்து ஹோட்டல் ஓனரையும் தரக்குறைவாக பேசுகிறார். பெரிய வேலை என்றும் இழிவாக பேசுகிறார்.

பறிபோன கதிர் வேலை

பறிபோன கதிர் வேலை

இதையடுத்து கதிரின் வேலை பறிபோகிறது. அவருக்கு செட்டில் செய்து அனுப்புகிறார் ஹோட்டலின் ஓனர். இதனால் வருத்தமடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய மனைவிக்காக உணவை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார் கதிர். தன்னுடைய மாமியார் குறித்து மனைவியிடம் அவர் எதுவும் கூறாமல் இருக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

தொடர்ந்து அங்குவரும் அவரது தம்பி கண்ணன், மீனாவின் குழந்தையையும் அழைத்து வருகிறார். மீனாவிற்கு தெரியாமல்தான் குழந்தையை தான் அழைத்து வந்ததாகவும் கூறுகிறார். இவ்வாறு எபிசோட் நிறைவடைகிறது. அடுத்தடுத்து இந்தத் தொடரின் எபிசோட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X