Pandian stores :பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேரும் நடிகை.. ரசிகர்கள் வருத்தம்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தொடர் டிஆர்பியிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தத் தொடர் விரைவில் நிறைவடையப் போவதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப பிரிந்திருந்த அண்ணன் -தம்பிகள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகும் கயல் :
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாக்கியலட்சுமி காணப்படுகிறது. இந்நிலையில் ஜீவாவின் மைத்துனி திருமணத்தில் ஏற்பட்ட மொய் தகராறு காரணமாக மூன்றாக பிரிந்திருந்த அண்ணன் -தம்பிகள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இதற்கும் கடைசி தம்பி கண்ணன்தான் காரணமாக அமைந்துள்ளார்.
நாங்கள் தனியாக சென்று வாழ்ந்துக் காட்டுவோம் என்று கண்ணன் -ஐஸ்வர்யா தம்பதி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற, ஜீவாவோ, தன்னுடைய மாமனார் வீட்டோடு செட்டில் ஆகிறார். ஆனால் சொன்னது போல இருவராலும் தன்னுடைய அண்ணனை விட்டுவிட்டு வெளியேறி சிறப்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஜீவா தன்னுடைய மாமனாரிடம் அவமானப்படுகிறார். கண்ணனோ, ஊரை சுற்றிக் கடன் வாங்கிவிட்டு வங்கி ஊழியர்களிடம் அடி உதை படுகிறார்.

தன்னுடைய தம்பியை திட்டியதை அடுத்த வங்கி ஊழியர்களை கதிர் சென்று அடித்து, கை கால்களை உடைக்கிறார். இதனால் அவர் சிறைக்கு செல்ல நேர்கிறது. இதையடுத்து வங்கியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தி, அவர் மீதான வழக்கை மூர்த்தி வாபஸ் பெற வைக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. வயிற்றுப் பிள்ளையுடன் முல்லை, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். அவரது அம்மாவுடன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை திட்டித் தீர்க்கிறார்.
இதனிடையே, இந்தத் தொடரின் அடுத்த ட்விஸ்ட்டாக, சீரியலில் தனம், ஐஸ்வர்யா, முல்லை இவர்களைவிட அதிகமான ஃபேன்பேஸ் கொண்ட கயல் பாப்பா தான் தற்போது சீரியலை விட்டு விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கயலின் உண்மையான பெயர் ஹாசினி. ஒரு பேட்டியில் ஹாசினியின் அம்மா இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஹாசினிக்கு பதிலாக அவரது அக்காவையே அந்த கேரக்டரில் நடிக்க கேட்டுள்ளார்களாம். இதனால் அவரது அக்கா அந்த கேரக்டரில் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கயலின் அக்காவும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அவரின் அம்மா கூறியுள்ளார். இதனிடையே க்யூட் பர்பார்மென்சால் ரசிகர்களை கவர்ந்த கயல் பாப்பா, இனி தொடரில் தொடர்ந்து நடிக்க மாட்டார் என்பதை கேள்வியுற்ற ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். அவருடைய இடத்தை அவரது அக்கா நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சீரியல் தற்போது நல்ல டிஆர்பியுடன் சென்றுவரும் நிலையில், நிறைவு செய்யாமல் அடுத்தடுத்த எபிசோட்களை நீட்டிக்கவே செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











