Pandian stores :அடுத்த பிரச்சினையை கொளுத்திப் போடும் முல்லை அம்மா.. வீட்டைவிட்டு வெளியேறும் தனம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது. இந்தத் தொடர் அந்த சேனலின் டிஆபி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்துவரும் நான்கு அண்ணன் -தம்பிகளும் தற்போது மூன்று குடும்பமாக பிரிந்து விட்டனர்.

இவர்கள் அனைவரும் தற்போது தங்களது வாழ்க்கை சூழலில் சந்தித்துவரும் பிரச்சினைகளை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay TVs Pandian stores serial new promo and episodes makes fans more attached

வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தி மற்றும் தனம் :விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு இணையான சிறப்பான அனுபவங்களை அந்த சேனலின் சீரியல்களும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. முக்கியமாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே 2, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி தொடர் சேனலின் முதலிடத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்ந்து பிரிந்த கணவன் -மனைவி மற்றும், மனைவியின் முன்னேற்றத்தை கூறுவதாக அமைந்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி நான்கு அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமை மற்றும் அவர்களது தற்போதைய பிரிவை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் என நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள் என ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை இந்தத் தொடரில் பார்க்க முடிந்தது.

Vijay TVs Pandian stores serial new promo and episodes makes fans more attached

இந்நிலையில், ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால், தன்னுடைய மாமனாரிடம் அவமானப்படும் ஜீவா, தான் தன்னுடைய வீட்டிற்கு வர மாட்டேன் என்ற கூறிவிட்டு தன்னுடைய மாமனார் வீட்டோடு தங்கி விடுகிறார். இதையடுத்து இந்தப் பிரச்சினைக்கு காரணமான கண்ணனை, மற்றவர்கள் திட்ட, அதனால் கடுப்பாகும் ஐஸ்வர்யா, தன்னுடைய கணவனுக்காக வரிந்துக் கட்டுவதுடன், அவரை வீட்டை தனிக்குடித்தனம் செய்ய அழைத்து செல்கிறார்.

இதையடுத்தும் மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். மூர்த்தி தனியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை சிரமத்துடன் நிர்வகித்து வருகிறார். கதிரும் இரவு -பகல் பார்க்காமல் தன்னுடைய ஹோட்டலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மாமனாருடன் வசித்துவரும் ஜீவா, தொடர்ந்து அவரால் அவமானப்படுத்தப்படுகிறார். இதேபோல தனிக்குடித்தனம் சென்ற கண்ணன், தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு வீட்டில் அதிகமான பொருட்களை வாங்கி போடுகிறார்.

Vijay TVs Pandian stores serial new promo and episodes makes fans more attached

இதனால் பண நெருக்கடிக்கு உள்ளாகும் அவர், தன்னுடைய அண்ணன் கதிரிடம் கடன் வாங்குகிறார். இதைக் கேள்விப்படும் தனம், அவர்களை திட்டிவிட்டு வருகிறார். இதனிடையே, முல்லையின் அம்மா, ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்கக்கூடாது என்றும் தன்னுடைய மகளுக்கு ஏதும் பிரச்சினை வரக்கூடாது என்றும், அதனால் தனம் அவரது அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் வருத்தப்படும் தனம், அழுதுக் கொண்டே, தன்னுடைய கணவனிடம் நடந்ததை கூற, இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இதையடுத்து அங்குவரும் கதிரும் முல்லையும் நடந்ததை யுகிக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று முல்லை சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தொடர்ந்து அங்குவரும் முல்லையின் அம்மாவையும் கண்டிக்கின்றனர். இதையடுத்து அவர் தனத்தை கோபத்துடன் சந்தோஷமா என்று கேட்கிறார். இதனால் கடுமையான கோபத்திற்கு உள்ளாகும் கதிர், தேவையில்லாமல் தனது அண்ணியிடம் எதுவும் பேசக்கூடாது என்றும் வீட்டை விட்டு கிளம்புங்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு இந்த வார ப்ரமோ அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X