Pandian stores :கண்ணனுக்காக சிறை செல்லும் கதிர்.. வயிற்றுப்பிள்ளையுடன் பரிதவிக்கும் முல்லை!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்தத் தொடரில் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தற்போது மூன்று குடும்பமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் சிறப்பாக வாழ்ந்து காட்டுவோம் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிவிட்டு வந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது ஊரை சுற்றிக் கடன் வாங்கிவிட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

Vijay TVs Pandian stores serial new promo and episodes makes fans more thrilling

கண்ணனுக்காக சிறை செல்லும் கதிர் :

விஜய் டிவியின் இந்த வார டிஆர்பியிலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். முதலிடத்தில் வழக்கம்போல பாக்கியலட்சுமி தொடரே நீடித்து வருகிறது. நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பேசுகிறது. சிறிய வீட்டில் 4 அண்ணன் -தம்பிகள், அவர்களது மனைவி, குழந்தைகள் என ஒரே இடத்தில் ஒற்றுமையாக இருந்தனர்.

இதனிடையே, ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால், அவர் கோபித்துக் கொண்டு, தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தங்கி விடுகிறார். இந்த தகராறில், வீட்டில் கோபித்துக் கொண்டு, கண்ணன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தனிக்குடித்தனம் போகிறார்கள். இருவரும், தவணை முறையில், கிரெடிட் கார்டை வைத்து, தேவையான, தேவையில்லாத பொருட்களை வீட்டிற்கு வாங்கிப் போடுகின்றனர்.

மேலும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு ஏற்பாட்டையும் செய்கின்றனர். இதையெல்லாம், ஒரேயொரு வளைகாப்பு வீடியோவை யூடியூபில் பதிவிட்டு, காசு பார்க்கலாம் என்று கணக்குப் போடுகிறார் ஐஸ்வர்யா. ஆனால் முன்னதாக, கிரெடிட் கார்டை பயன்படுத்தி அவர்கள் வாங்கிய பணத்தை வசூலிக்க, வங்கி ஆட்கள், வந்து தகராறு செய்கின்றனர். தொடர்ந்து அவர்கள் எக்ஸ்க்யூஸ் கேட்பதை அடுத்து, வங்கி ஆட்கள், கண்ணனை அடித்து துவைக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யாவையும் தவறாக பேசுகின்றனர்.

Vijay TVs Pandian stores serial new promo and episodes makes fans more thrilling

இதனால் இருவரும் அவமானத்திற்கு உள்ளாகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும், கண்ணனின் அண்ணன் கதிர், நடந்ததை கேள்வியுற்று, வங்கி ஆட்களை பதிலுக்கு அடித்து எடுக்கிறார். இதனால் அவர்கள், அதிகமாக காயமடைவதுடன், அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்கின்றனர். இதையடுத்து, கதிர் வீட்டிற்கு வரும் போலீசார், அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனால் குடும்பமே அல்லோல கல்லோலப் படுகிறது. தன்னுடைய கணவனின் இந்த நிலையால், நிலைக்குலைந்துப் போகிறார் முல்லை.

அவரது நிலையைப் பார்த்து, மூர்த்தி மற்றும் தனமும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனிடையே, கதிரை காவல் நிலையத்திலிருந்து மீட்டு கொண்டுவர முயற்சிக்கும் மூர்த்தியின் முயற்சியும் கைகூடாமல் போகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குப் போகும் மூர்த்தி, கண்ணனின் வீட்டிற்கு போய், அவரை கண்டபடி பேசுவதுடன், அடிக்கவும் செய்கிறார். தன்னுடைய அண்ணனின் நிலைக்கு தான்தான் காரணம் என்ற நினைப்பு கண்ணனை அவமானத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்குகிறது. ஐஸ்வர்யாவும் தன்னுடைய நிலையை நினைத்து கதறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X