Pandian stores :மாமனார் வீட்டில் மரியாதைக்காக ஏங்கும் ஜீவா.. பரிதவிக்கும் மீனா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

இந்தத் தொடரில் 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பம் என ஒற்றுமையான குடும்பத்தை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில், ஒரே குடும்பமாக இருந்த அண்ணன் -தம்பிகள், மொய் வைக்கும் பிரச்சினையில் 3 குடும்பமாக பிரிந்துள்ளனர். இதனால் மூத்த அண்ணன் மூர்த்தி மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Vijay TVs Pandian stores serial new promo makes fans more interest

மரியாதைக் குறைவாக நடத்தப்படும் ஜீவா : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சேனலின் இரண்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இடம்பிடித்துள்ளது. இந்தத் தொடரில் நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள், குழந்தைகள் என குடும்பத்தின் ஒற்றுமையை கதைக்களமாக இந்தத் தொடர் கொண்டுள்ளது. இந்நிலையில் ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரே வீட்டில் இருந்த இவர்கள் தற்போது மூன்று குடும்பமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில், தனித்தனியான பெயர்களில் மொய் வைக்கப்பட, முக்கியமான நபரான ஜீவாவின் பெயர் விடுபடுகிறது. இதனால் தன்னுடைய மாமனாரிடம் அவமானப்படுகிறார் ஜீவா. தொடர்ந்து தன்னுடைய அண்ணனிடம் நியாயம் கேட்டு, பிரிகிறார். இதற்கு காரணமான கண்ணனை வீட்டில் உள்ளவர்கள் கோபத்துடன் திட்ட, அதை சாக்காக வைத்து அவரை வீட்டிலிருந்து பிரித்து தனியாக அழைத்து வந்து விடுகிறார் ஐஸ்வர்யா.

Vijay TVs Pandian stores serial new promo makes fans more interest

இந்நிலையில், ரீல்ஸ் போடுகிறேன் பேர்வழி என்று ஐஸ்வர்யா கீழே விழுந்து வைக்க, மருத்துவமனை செலவுக்காக கண்ணன் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில், கதிர் அவருக்கு கைக்கொடுக்கிறார். இந்நிலையில், மாமனார் வீட்டுடன் செட்டிலாகும் ஜீவாவிடம் தன்னுடைய பிசினசை கவனிக்கும் பொறுப்பை அவரது மாமனார் கொடுக்கிறார். ஆனாலும், அவரது பிடி தன்னிடம் இருக்கும்படி செய்கிறார்.

ஜீவா எந்த நல்ல முயற்சி எடுத்தாலும் அதில் ஒரு நொட்டு கண்டுபிடிக்கிறார். எதை செய்தாலும் தன்னிடம் சொல்லிவிட்டு செய்யும்படி அவரிடம் அடிக்கடி கூறுகிறார். இதனால் ஜீவா அவமானமாக உணர்கிறார். வேலையாட்களிடமும் அவருக்கு அவமானமே கிடைக்கிறது. மேலும் அவர் சொல்லும் சிறப்பான பல முயற்சிகளிலும் குற்றம் கண்டுபிடித்து அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறார் அவரது மாமனார். இதனால் ஜீவா கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.

மாமனாரின் நிலத்தை பிளாட் போட்டு விற்றால் 3 கோடி ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று திட்டமிட்டு ஜீவா கூற, அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் ஜனார்த்தனன். மாறாக, அந்த நிலத்தை 50 லட்சத்திற்கு விற்பதே சிறப்பான முடிவு என்று அடித்து கூறுகிறார். தன்னுடைய அண்ணனுடன் இருக்கும்போது, ஜீவாவின் அனைத்து திட்டங்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைத்து வந்த நிலையில், தற்போது தன்னுடைய மாமனார் வீட்டில் அந்த அடிப்படை மரியாதை கிடைக்காமல் திண்டாடுகிறார் ஜீவா. இதை அவரது மனைவி மீனாவிடம் கூற, அவரும் எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X