Pandian stores :அடுத்தடுத்து கதிரிடம் பணம் வாங்கும் கண்ணன்.. கடன் வாங்கத்தூண்டும் ஐஸ்வர்யா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை வழங்கி வருகிறது.

ஒரே குடும்பமாக இருந்த அண்ணன் -தம்பிகள் 4 பேரும் தற்போது மூன்று குடும்பங்களாக பிரிந்து காணப்படுகிறது. மொய் வைப்பதில் ஏற்பட்ட தகறாறு இவர்களை பிரித்துள்ளது.

ஜீவா தன்னுடைய மாமனார் வீட்டுடன் செட்டில் ஆகிய நிலையில், கண்ணன், தற்போது ஐஸ்வர்யாவுடன் தனிக்குடித்தனமாக வாழ்ந்து வருகிறார்.

Vijay TVs Pandian stores serial new promo makes fans more thrilling

கண்ணனை கடன் வாங்கத் தூண்டும் ஐஸ்வர்யா : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இன்ப துன்பத்திலும் ஒரே குடும்பமாக வாழ்ந்துவந்த அண்ணன் -தம்பிகள் 4 பேரும் தற்போது மூன்று குடும்பமாக பிரிந்து வாழ்ந்து வருகிறன்றனர். மொய் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜீவா, தன்னுடைய குடும்பத்தை பிரிந்து மாமனார் வீட்டுடன் செட்டில் ஆகியுள்ளார். இதேபோல கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.

தன்னுடைய மாமனார் வீட்டுடன் செட்டில் ஆகியுள்ள ஜீவா, அவரின் பிசினஸ் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படி கூறப்படுகிறார். ஆனால், அவர் இந்த பிசினசில் தன்னுடைய மாமனாரில் அதிகப்படியான தலையீட் சந்திக்க வேண்டிவருகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். தான் கூறும் எந்தவிதமான யோசனையையும் அவருடைய மாமனார் நிராகரிக்கும் நிலையையே ஜீவா எதிர்கொள்ள வேண்டி வருகிறார். இதையெல்லாம் சொல்லி தன்னுடைய மனைவி மீனாவிடம் அவர் தொடர்ந்து புலம்புகிறார்.

Vijay TVs Pandian stores serial new promo makes fans more thrilling

இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, அதிகமான பொருட்களை கடனில் வாங்கிவிட்டு அடுத்த வேளை சோற்றிற்கே திண்டாடும் நிலை காணப்படுகிறது. இடையில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட், மருத்துவமனை செலவுகளை கதிர் பார்த்துக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து மருந்துகளை வாங்கக்கூட காசில்லாமல் கண்ணன் அவமானப்படுகிறார். கிரெடிட் கார்ட் பில்லை கட்ட முடியாமல் அவமானப்படுகிறார்.

இதனிடையே மீண்டும் கதிரிடம் கடன் வாங்கி வருமாறு ஐஸ்வர்யா கூறுகிறார். இதன்முலம் தன்னுடைய யூடியூபை டெவலப் செய்ய முடியும் என்றும் குவாலிட்டியான வீடியோக்களை போஸ்ட் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் தன்னுடைய அண்ணன், கதிரிடம் அடுத்தடுத்து கடன் வாங்குவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் கண்ணன். ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல், நாம் சம்பாதித்தால் கதிர் மாமாவிற்கு கொடுத்துவிடலாம் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

Vijay TVs Pandian stores serial new promo makes fans more thrilling

இதனிடையே வீட்டில் இருக்கும் தனத்திறகு தொடர்ந்து நெஞ்சு வலி வருகிறது. இதனால் அவர் வருத்தத்துடன் முல்லையிடம் இதை பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய முதல் குழந்தையை உண்டாகியிருந்தபோதுகூட தனக்கு இதுபோல ஏற்படவில்லை என்றும் கூறுகிறார். இதனால் கவலைப்படும் முல்லை, மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று கூறுகிறார். ஆனால் அடுத்த மாதம் செக்கப்பின்போது கேட்டுக் கொள்ளலாம் என்று அலட்சியம் காட்டுகிறார் தனம். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X