ஐஸ்வர்யாவின் புதிய பிசினஸ் திட்டம்.. கண்ணனிடம் கொளுத்திப் போட்ட மீனா!

சென்னை : கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை பேசும் தொடர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Recommended Video

Bhakyalakshmi | விவாகரத்து.. கொடுக்க முடிவெடுத்த Bakiya, என்ன இப்படி ஆயிடுச்சு! *TV

இந்தத் தொடரில் 4 அண்ணன் -தம்பிகள் ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சில சச்சரவுகள் இருந்தாலும் அவர்களின் மனைவிகளும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவே இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

சினிமாவில் குடும்ப ஒற்றுமையை பேசிய படங்கள் பல வந்துள்ளன. ஆனால் சின்னத்திரையில் அத்தகைய சீரியல்கள் குறைவு என்றே சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அந்தக் குறையை போக்கி வருகிறது. இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகள் 4 பேர் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்கின்றனர்.

அண்ணன் -தம்பிகள் கதை

அண்ணன் -தம்பிகள் கதை

மூர்த்தி, கதிர், கண்ணன், ஜீவா என அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள் என இந்தத் தொடர் சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இது போன்ற கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது அனைவருக்கும் கனவாக இருக்கலாம். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள், சிலரின் சுயநலங்கள், நவீன வாழ்க்கை முறை அவற்றிற்கான முட்டுக் கட்டைகளாக உள்ளன.

கனவு வாழ்க்கை

கனவு வாழ்க்கை

அந்த வகையில் இத்தகைய கனவு வாழ்க்கையை பார்த்துக் கொள்ளும் திருப்தியை இந்தத் தொடர் கொடுத்து வருகிறது. இந்த குடும்பத்தில் இருந்து சிலரது சதியால் வெளியேறும் கதிர் மற்றும் முல்லையும் தற்போது தனியாக ஹோட்டல் வைத்து வைராக்கியத்துடன் முன்னேறி வருகின்றனர்.

தொடரின் சுவாரஸ்யம்

தொடரின் சுவாரஸ்யம்

அவர்கள் வீட்டிற்கு வராததால் பேசாமல் இருக்கும் மூத்த அண்ணி தனம், ஆனாலும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார். இந்தத் தொடரில் சுவாரஸ்யம் என்றால் அது மீனா மற்றும் ஐஸ்வர்யாதான். இருவருக்கும் அடிக்கடி முட்டிக் கொள்கிறது. மாற்றி மாற்றி வம்பிழுப்பதும் ஜாடை பேசுவதுமாக இவர்கள் கேரக்டர் காணப்படுகிறது.

கொளுத்திப் போடும் மீனா

கொளுத்திப் போடும் மீனா

இதில் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் வைக்க திட்டமிட்டுள்ளதாக கண்ணனிடம் கொளுத்திப் போடுகிறார் மீனா. அதெல்லாம் இருக்காது அண்ணி, இதுகுறித்து என்னிடம் ஐஸ்வர்யா எதுவுமே பேசவில்லை என்று அப்பாவியாக கண்ணன் கூறும்போது, என்னது உன்னிடமே எதுவும் சொல்லலையா என்று மீனா கேட்கிறார்.

வீட்டை கவனிக்க நேரமிருக்காது

வீட்டை கவனிக்க நேரமிருக்காது

தொடர்ந்து தனத்திடமும் இதுகுறித்து ஐஸ்வர்யா பேசிவிட்டதாகவும், அப்படி அவள் பியூட்டி பார்லர் ஆரம்பித்தால் கண்ணனை கவனிக்கக்கூட நேரமில்லாமல் மேக்கப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார் என்றும் மூட்டி விடுகிறாள் மீனா. மேலும் வீட்டில் அதிகமான வேலை இருக்கும்போது இது தேவையா என்றும் கேட்கிறாள்.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

இவ்வாறு இந்த வார எபிசோட்களின் காட்சிகள் காணப்படுகின்றன. இதையொட்டி புதிய ப்ரமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த ப்ரமோவை வைத்து பார்க்கையில் இந்த வாரம் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம். மீனா கொளுத்திப் போட்ட இந்த வெடி எப்போது எப்படி வெடிக்கும் அல்லது வழக்கம்போல புஸ்வானமாகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X