வீடு கட்ட தயாராகும் மூர்த்தி.. அடுத்தக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அட நிலம்கூட வாங்கியாச்சா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னதாக பாக்கியலட்சுமி தொடருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகா சங்கமத்தில் ஈடுபட்டு ராதிகா மற்றும் கோபியை வைத்து செய்தனர்.

தற்போது புது வீடு கட்டுவதற்காக நிலத்தை வாங்கி அதை அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளார் மூர்த்தி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக அண்ணன் -தம்பிகளின் பாசம் மற்றும் ஒற்றுமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் தங்களுடைய பூர்வீக வீட்டிலிருந்து வெளியேறி தற்போது வேறு ஒரு வீட்டில் வசித்துவரும் அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கை நிலையை தற்போதைய எபிசோட்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

வீடு கட்ட நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்

வீடு கட்ட நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்

இந்நிலையில் புதிதாக வீடு கட்டும் முயற்சியில் மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மீனாவின் அப்பா முயற்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் நிலையில், தற்போது மூர்த்தி புதிதாக வீட்டு மனையையை விலைக்கு வாங்கி அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்கிறார். அந்த பத்திரத்தை அண்ணன் -தம்பிகள் தங்களின் மனைவிகளிடம் கொடுக்கின்றனர்.

கேள்வி கேட்கும் மீனா

கேள்வி கேட்கும் மீனா

அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்க்கும் தனம் தன்னுடைய மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக உற்சாகத்துடன் கூறுகிறார். தொடர்ந்து மீனா தங்கள் அனைவரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக மூர்த்தி கூறிய நிலையில், அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்புகிறார். மூர்த்தியோ, மீனா ஆசைப்பட்டால் பெண்களின் பெயரில் பத்திரத்தை மாற்றி எழுதுவதாக கூறுகிறார்.

அடுத்த வம்பு ரெடி

அடுத்த வம்பு ரெடி

இதனிடையே அவர்கள் அனைவரும் அந்த மனையை பார்த்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அங்குவரும் மீனாவின் அப்பா, அவர்களின் பழைய வீட்டில் இருந்த சாமான்களை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். அனைத்து சாமான்களையும் வீசாத குறையாக எடுத்து போடுகிறார். அப்போது அவர்கள் பெற்றோர் புகைப்படம் கீழே விழுந்து கண்ணாடி உடைகிறது.

கையை கிழித்துக் கொள்ளும் தனம்

கையை கிழித்துக் கொள்ளும் தனம்

இதைப் பார்த்து பதைபதைக்கும் தனம் அதை எடுக்க முயற்சிக்க உடைந்த கண்ணாடி அவரது கையில் குத்தி ரத்தம் வருகிறது. இதைப் பார்த்த அண்ணன் -தம்பிகள் அனைவரும் கோபமடைகின்றனர். ஜனார்த்தனனை அவர்கள் அனைவரும் முறைத்து பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. அடுத்த எபிசோடை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X