குங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...!

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் கதை இப்போ கொஞ்சம் சீரியஸா போயிகிட்டு இருக்கு.

குலசாமி கோயிலுக்கு செம்பா வரக்கூடாதுன்னு குருஜி சொன்னானராம். இதுக்கான காரணத்தை என்கிட்டே கேட்காதே...ஆனா,செம்பா குல சாமி கோயிலுக்கு வர கூடாதுன்னு அப்பா கண்டிஷனா சொல்லிடறார்.

செம்பாவுக்கு அது சொந்த ஊர்...ஒரு வேலைக்காரியா இந்த வீட்டுக்கு அந்த ஊரிலிருந்து வந்தவதான் செம்பா.அதோட இவளின் அப்பா கார்த்திக் அப்பாவின் நண்பர் வேற.

செம்பாகிட்ட எப்படி

செம்பாகிட்ட எப்படி

செம்பா கோயிலுக்கு போறது.. ஊரில் யார் யாரை பார்க்கறதுன்னு ஆசை ஆசையா பேசிக்கிட்டே இருக்கா. இவகிட்ட போயி எப்படி நீ வரக்கூடாதுன்னு சொல்றதுன்னு யோசிச்ச புருஷன் கார்த்திக், தங்கச்சி வினோதினி கிட்ட சொல்லி செம்பாகிட்ட சொல்ல சொல்றான்.

நான் ஊருக்கு போறேன்

நான் ஊருக்கு போறேன்

அண்ணிகிட்ட நான் எப்படி சொல்றது அண்ணா...என்னை விட்டுடு நானும் கோயிலுக்கு வரல.நானும் ஹரீஷும் ஊருக்கு போறோம்னு சொல்றா வினோதினி.

பாலில் குங்கும பூ

பாலில் குங்கும பூ

இரவு படுக்கைக்கு ரெண்டு தம்ளர் பால் எடுத்துகிட்டு வர்றா செம்பா.பாலா.. கொண்ட குடிக்கலாம்னு ஒரு பாலை எடுக்க சின்னய்யா அந்த பால் வேணாம்..இதை எடுத்துக்கோங்கன்னு சொல்றா செம்பா. கார்த்திக் ஏன் இந்த பாலுக்கு என்னன்னு கேட்க, அந்த பாலில் குங்கமப்பூ போட்டு இருக்கேன் சின்னய்யான்னு சொல்றா.

குழந்தை பெத்துக்க

குழந்தை பெத்துக்க

இத்தனை நாளும் நினைக்கலை..இப்போ எனக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்துருச்சு சின்னய்யா... ஊருக்கு போற சமயத்துல அப்பாவே எனக்கு குழந்தையா பிறக்கலாம்தானே சின்னய்யான்னு கேட்கறா..

நீ இங்கேயே

நீ இங்கேயே

ஆமாம் செம்பா.. நம்ம குழந்தை பெத்துக்கணும் இல்லே... நீ இங்கேயே இரு.. நாங்க குலசாமி கோயிலுக்கு போயிட்டு வரோம்னு நைஸா சொல்றான். என்ன சின்னய்யா நீங்க.. ஊருக்கு வரணும்னு என்னோட எத்தனை வருஷ கனவு...இப்படி சொல்றீங்களே சின்னய்யான்னு சொல்றா..

ஐயா வார்த்தையை

ஐயா வார்த்தையை

நீ பெரிய ஐயா வார்த்தையை மதிக்கிறியா இல்லையான்னு கேட்கறான்.ரொம்ப மதிக்கறேன் சின்னய்யான்னு சொல்றா செம்பா...அப்பாநீ வரக்கூடாதுன்னுதான் பெரிய அய்யா குருஜி சொன்னதா சொன்னாங்கன்னு சொல்றான்.

நான் வேலைக்காரிதானா?

நான் வேலைக்காரிதானா?

அப்போ இந்த வீட்டுல நானும் ஒருத்தி இல்லையா சின்னய்யா..வெறும் வேலைக்காரி மட்டும்தானா..இந்த வீட்டுல நான் யாருன்னு நீங்களே சொல்லுங்க சின்னய்யான்னு அழறா செம்பா...

என்னடா குலசாமி கோயிலாம்...அதுக்கு கடைசி மருமக மட்டும் வரக்கூடாதாம்..என்ன சடங்கோ சம்பிரதாயமோ... நல்ல குலசாமிக்கு அதிசய குருசாமி போல...கதையை பார்த்து எழுந்துங்க பா..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X