கல்யாணம் ஆன 45 நாளில் அதிரடி முடிவு.. சூப்பர் சிங்கர் அஜய் - ஜெஸ்ஸியோட பிளான் என்னன்னு தெரியுமா!

சென்னை : வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான களமாக காணப்படுகிறது விஜய் டிவி.

இந்த டிவியில் சீரியல், நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் 3 சீசன்களை கடந்து மிஸ்டர் என்று மிஸஸ் சின்னத்திரை ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

 விஜய் டிவி

விஜய் டிவி

வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்த சேனலின் பல நிகழ்ச்சிகள் குறிப்பாக பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள், குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இவை அனைத்தும் பல சீசன்களை கடந்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி நிறைவு கட்டத்தை அடைந்துள்ள நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளது. இதனிடையே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து விரைவில் 4வது சீசன் துவங்கவுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்கின்றனர். அதன்மூலம் அவர்களது அடுத்த டார்கெட்டாக சினிமா மாறுகிறது. அந்த வகையில் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் சிறப்பான பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை

இதேபோல, விஜய் டிவியில் கடந்த 3 சீசன்களாக சிறப்பாக ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் ரோஷினியின் கணவர் ஜாக் பங்கேற்றார். அவர் தற்போது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார்.

விரைவில் 4வது சீசன்

விரைவில் 4வது சீசன்

இந்நிலையில் விரைவில் இந்த ஷோவின் 4வது சீசன் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் முதல் 5 ஜோடிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அடுத்த வாரம் அடுத்த ஜோடிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். இதில் சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா தனது காதல் மனைவி ஜெஸ்ஸியுடன் கலந்துக் கொள்ளவுள்ளார்.

சூப்பர் ப்ரமோ வெளியீடு

சூப்பர் ப்ரமோ வெளியீடு

இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து 45 நாட்களே ஆன நிலையில் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியின் ஆங்கர் மாகாபா இவர்களை கலாய்க்கும்வகையில் ப்ரமோ அமைந்துள்ளது.

நம்பிக்கை ஜோடிகள்

நம்பிக்கை ஜோடிகள்

இளம் ஜோடிகளான இவர்கள் இந்த நிகழ்ச்சியில் மிகுந்த நம்பிக்கையுடன் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முந்தைய 3 சீசன்களும் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. அந்த வகையில் இந்த 4வது சீசனும் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X