சூப்பர் சிங்கர் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறாரா பிரியங்கா?... கோபத்தில் டீம்

சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ மூலம் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார் பிரியங்கா.

சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னர் அப் ஆனார்.

இந்நிலையில் பிரியங்காவின் மீது சூப்பர் சிங்கர் டீம் மிகுந்த கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் சிங்கர் ஷோ

சூப்பர் சிங்கர் ஷோ

விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராக உள்ளார் பிரியங்கா. இவரது பயணம் சன் டிவியின் குட் மார்னிங் ஷோ, சுட்டி டிவியின் குட்டீஸ் ஷோ என துவங்கியது. இதையடுத்து விஜய் டிவியில் இணைந்த இவருக்கு சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. அங்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன்மூலம் பிரபலமாகியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா

பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா

தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5ல் இணைந்து தன்னுடைய சிறப்பான செயல்பாட்டின்மூலம் ரன்னர் அப் ஆனார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் மைனா நந்தினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆயினும் இந்த நிகழ்ச்சியை சிறப்பான வகையில் கொண்டுபோன பிரியங்காவை ரசிகர்கள் வெகுவாக மிஸ் செய்தனர்.

த்ரிஷா கெட்டப்பில் பிரியங்கா

த்ரிஷா கெட்டப்பில் பிரியங்கா

பிக் பாசிலிருந்து வெளியே வந்த பிரியங்கா, தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இரண்டு வாரங்கள் நடத்தினார். கடந்த வாரத்தில் கெட்டப் ரவுண்டில் 96 த்ரிஷா கெட்டப்பில் வந்து அசத்தினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் மிகவும் குஷியாகினர்.

ஐதராபாத் பயணம்

ஐதராபாத் பயணம்

இந்நிலையில் பிக்பாஸ் நண்பர்கள் பாவ்னி, மது, அபிஷேக்குடன் ஐதராபாத்திற்கு பிக்னிக் சென்றிருந்தார் பிரியங்கா. இந்த வீடியோவையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த பயணம் சூப்பர் சிங்கர் குழுவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரது இந்த பயணத்தால் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார்.

Recommended Video

நான் குடிகாரன் இல்ல Pandian Stores Venkat clarify | pandian Stores Jeeva drinking Scene
கடுப்பில் சூப்பர் சிங்கர் டீம்

கடுப்பில் சூப்பர் சிங்கர் டீம்

இதனால் பிரியங்கா மீது கடுமையான கடுப்பில் சூப்பர் சிங்கர் குழு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து மைனா நந்தினியை வைத்தே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர டீம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரம் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மட்டுமே இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X