என் குடும்ப பிரச்சினை.. தாயை எதிர்த்து பேசும் வசுந்தரா.. தமிழும் சரஸ்வதியும் தொடரில் அடுத்த ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வரிசையில் இடம்பிடிக்கும் முயற்சியில் தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடர் முன்னேறி வருகிறது.
அந்த வகையில் பல பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு இந்தத் தொடர் தினந்தோறும் கொடுத்து வருகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக உள்ளன. அந்த வகையில் இந்த சேனலின் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தொடர்களில் கவனம்
இதுமட்டுமில்லாமல் தொடர்களிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து பாக்கிலட்சுமி, பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் முன்னிலையில் உள்ளன. அடுத்தக்கட்டத்தில் தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

தமிழும் சரஸ்வதியும் தொடர்
அந்த வகையில் தற்போது தமிழும் சரஸ்வதியும் புதிய பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளன. இந்தத் தொடரில் தமிழ் மற்றும் சரஸ்வதி கேரக்டர்களில் தீபக் மற்றும் நக்ஷத்ரா நடித்து வருகின்றனர். படிக்காத தன்னுடைய மகனுக்கு படித்த பெண்ணை மணமுடிக்க அவரது அம்மா கோதை முடிவெடுக்கிறார்.

சரஸ்வதியை வெறுக்கும் கோதையம்மாள்
ஆனால் படித்த பெண் என்று நினைத்து சரஸ்வதியை, தனது மகன் தமிழுக்கு திருமணம் செய்து வைக்கிறார். உண்மை தெரியவரும்போது, சரஸ்வதியை கோதையம்மாள் வெறுக்கிறார். தொடர்ந்து அவரின் அன்பை பெற அதிகமான முயற்சிகளில் ஈடுபடுகிறார் சரஸ்வதி. இவ்வாறு அந்தத் தொடர் சென்று வருகிறது.

குற்றம் சாட்டும் சந்திரகலா
இந்நிலையில், மற்றொரு மகன் கார்த்திக் மற்றும் அவரது மனைவி வசுந்தரா இருவரும் இணைந்து வாழாதது குறித்து அறிந்துக் கொள்ளும் கோதை அம்மாள், அதுகுறித்து அவர்களிடம் கேட்கிறார். அப்போது அங்குவரும் வசுந்தராவின் அம்மா சந்திரகலா, தன்னுடைய மகளின் வாழ்க்கையை அவர்களது குடும்பத்தினர் பாழாக்கிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

தாயை எதிர்க்கும் வசுந்தரா
இதையடுத்து தனது மகள் வசுந்தராவின் கைகளை பிடித்து வா வீட்டிற்கு போகலாம் என்று கூறுகிறார். ஆனால் இது தனது குடும்ப பிரச்சினை என்றும் அவர் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் கோபத்துடன் வசுந்தரா கூறுகிறார். இதையடுத்து அங்கிருந்து கோபத்துடன் சந்திரகலா புறப்பட்டு சென்று விடுகிறார்.

தமிழ் -சரஸ்வதி மகிழ்ச்சி
இதையடுத்து அந்த இடத்தில் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தமிழ் மற்றும் சரஸ்வதி அந்த தருணத்தை கடக்கின்றனர். ஆனாலும் வசுந்தராவின் முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கோதையம்மாளும் அவரது இந்த நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு தற்போதைய எபிசோட் பரபரப்பாக செல்கிறது.


Click it and Unblock the Notifications











