சரஸ்வதியின் சபதம்... தமிழுக்கு மீண்டும் ஜிஎம் போஸ்ட் கிடைக்குமா?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொடர் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்தத் தொடரில் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்களுடன் தொடர் நடைபோட்டு வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் தொடர்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் போலவே அதன் தொடர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தமிழும் சரஸ்வதியும் தொடர்.

+2 பாஸ் செய்யாத சரஸ்வதி
இந்தத் தொடரில் நடிகர் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படித்த பெண் என்று கருதப்படும் நக்ஷத்ரா 12வது கூட பாஸ் செய்யாதவர் என்பது அவரது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.

பறிக்கப்படும் தமிழின் ஜிஎம் போஸ்ட்
உண்மை தெரியாமல் இருந்த கோதை அம்மாவிற்கு உண்மை தெரியவர அடுத்த நாளே தமிழின் ஜிஎம் போஸ்ட் பறிக்கப்பட்டு அவர் தனது நிறுவனத்திலேயே ஊழியராக பணிபுரியும் சூழல் ஏற்படுகிறது. இதை கேள்விப்படும் சரஸ்வதி வருத்தப்பட்டு கோதை அம்மாவின் மருமகன் கார்த்திக்கிடம் சென்று பேசுகிறார்.

மரியாதை குறைவாக பேசும் கார்த்திக்
ஆனால் அவர் சரஸ்வதியை மரியாதைக்குறைவாக நடத்துகிறார். அவர் பிளஸ் டூவில் பெயிலானதை குத்திக் காட்டி பேசுகிறார். இதையடுத்து தான் கண்டிப்பாக எம்பிஏ பாஸ் செய்வேன் என்று சரஸ்வதி சபதம் போடுகிறார். தொடர்ந்து பேசும் கார்த்திக் முதலில் ப்ளஸ் டூ பாஸ் செய்யுமாறு அவமரியாதையாக பேசுகிறார்.

சரஸ்வதி சபதம்
உடனடியாக தான் அப்படி பாஸ் செய்துவிட்டால் மீண்டும் தமிழுக்கு ஜிஎம் போஸ்ட் கொடுத்து மரியாதையாக நடத்துவாரா என்று சரஸ்வதி கார்த்திக்கிடம் கேட்கிறார். இந்த சவாலை கார்த்திக்கும் ஏற்கிறார். இனிவரும் எபிசோடுகளில் பிளஸ் டூ பாஸ் செய்ய சரஸ்வதி மேற்கொள்ளும் முயற்சிகளை காண முடியும். இதன் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











