Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதிய ஆர்டரை வாங்கும் தமிழ் -சரஸ்வதி... கடுப்பில் கார்த்தி -சந்திரகலா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களின் ஒன்றாக தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடர் மாறியுள்ளது.
இந்தத் தொடரில் பிரபல விஜே தீபக், நக்ஷத்ரா நாகேஷ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏமாற்றி திருமணம் செய்ததாக கடந்த சில வாரங்களில் தன்னுடைய மகன் மற்றும் மருமகளை வெறுத்துவந்த கோதை அம்மாள் தற்போது அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அல்டிமேட்ன்னு
சும்மாவா
சொன்னாங்க...அஜித்தை
புகழ்ந்த
பிரபலம்

தமிழும் சரஸ்வதியும் தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களான பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் வரிசையில் தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடர் இணைந்துள்ளது. இந்தத் தொடரில் பிரபல தொகுப்பாளர் தீபக் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஏமாற்றித் திருமணம்
இந்தத் தொடரில் படிக்காத சரஸ்வதி, படித்ததாக தன்னை ஏமாற்றி தன்னுடைய மகனை திருமணம் செய்ததாக அவரையும் தன்னுடைய மகனையும் வெறுத்து ஒதுக்குகிறார் கோதை அம்மாள். அவர் அவ்வாறு செய்வதற்கு அவரது கார்த்திக் மற்றும் அவரது மாமியார் சந்திரக்கலா தொடர்ந்து திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.

சமையல் பொறுப்பை ஏற்கும் சரஸ்வதி
தமிழிடம் இருந்து பறிக்கப்படும் அவர்களது நிறுவனத்தின் தலைமை பொறுப்பு கார்த்திக்கிடம் தற்போது உள்ளது. இந்நிலையில் கோதை அம்மாளின் அன்பை பெறுவதற்காக தமிழ் மற்றும் சரஸ்வதி தொடர்ந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அந்த வீட்டின் சமையல் பொறுப்பை சரஸ்வதி மேற்கொண்டு வருகிறார்.

சந்திரகலா சதித்திட்டம்
அதை அவரிடம் இருந்து பறிப்பதற்காக சந்திரகலா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலும் அதை அவரிடம் இருந்து பறிக்க முடியல்லை. கம்பெனி விஷயத்தில் புதிதாக ஆர்டர் ஒன்றை தமிழும் சரஸ்வதியும் பெறுகின்றனர். இதுகுறித்து கோதை அம்மாவும் ஓகே சொல்கிறார்.

கார்த்திக் -கோதையம்மாள் பிரச்சினை?
இதுதெரியாமல் கார்த்திக் மற்றும், சந்திரகலா இருவரும் பிசினசில் புதிய ஐடியாக்களை கொண்டுவர திட்டம் தீட்டுகின்றனர். ஆனாலும் கோதை அம்மாள் தொடர்ந்து தமிழுக்கு சப்போர்ட் செய்யும் நிலையில், கார்த்திக் மற்றும் கோதை அம்மாள் இடையில் மனக்கசப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.