நான் உங்ககிட்ட பேசக்கூட விரும்பல.. மாமியாரிடம் வெறுப்பை உமிழ்ந்த கார்த்திக்.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை :விஜய் டிவியின் முன்னணி வரிசையில் இடம்பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது தமிழும் சரஸ்வதியும் தொடர்.
இந்தத் தொடரில் படிக்காத சரஸ்வதி, படித்ததாக நினைத்து கோதை அவரை தன்னுடைய வீட்டு மருமகளாக்குகிறார்.
ஆனால் அவர் +2 கூட முடிக்காதவர் என்பது தெரிந்தவுடன் அவரை வெறுக்கும் அவர் தற்போது தன்னுடைய மருமகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழும் சரஸ்வதியும் தொடர்
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடர் கடந்த ஆண்டிலிருந்து தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய நிலையில், சில மாதங்களிலேயே ஏராளமான ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. படிக்காத தன்னுடைய மகன் தமிழுக்கு படித்த மருமகளை கொண்டுவர நினைக்கிறார் கோதை அம்மாள்.

படிக்காத சரஸ்வதி
ஆனால் அவரது நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் சரஸ்வதி அவரது குடும்பத்தின் மருமகளாக ஆகிறார். அவர் +2 கூட பாஸ் செய்யாத நிலையில், அவர் படித்தவர் என்று நினைத்து கோதை அம்மாள் இந்த திருமணத்தை நடத்துகிறார். இதையடுத்து தன்னுடைய மருமகள் சரஸ்வதியை அவர் வெறுக்கிறார்.

கோதை அம்மாளை கவர்ந்த சரஸ்வதி
ஆனால் தொடர்ந்து சரஸ்வதியின் செயல்பாடுகள் கோதை அம்மாளை மிகவும் கவர அவரை ஏற்றுக் கொள்கிறார். குடும்பத்தின் ஒற்றுமைக்காக சரஸ்வதி ஒரு பக்கம் போராட அதை குலைத்து தன்னுடைய மருமகன் கார்த்திக் அந்த வீட்டின் முதன்மை பெற வேண்டும் என்று கோதையின் சம்பந்தி சந்திரகலா காய் நகர்த்துகிறார்.

சந்திரகலாவின் சதி
சரஸ்வதி +2 முடிப்பதற்காக பரிட்சைக்கு தயாரான நிலையில், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் பரிட்சையை எழுத முடியாதபடி செய்கிறார். ஆனால் அவர் தன்னுடைய எக்சாமை சிறப்பாக முடிக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் கார்த்திக் தன்னுடைய மாமியாரை வெறுக்கிறார்.

மாமியாரை திட்டும் கார்த்திக்
கார்த்தியின் இந்த செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய அம்மா சந்திரகலாவை திட்டுகிறார் வசு. இதனிடையே, தற்போது தன்னுடைய அண்ணன் மற்றும் அண்ணியின் நல்ல குணத்தை அறிந்துக் கொள்ளும் கார்த்திக், தன்னுடைய மாமியாரை திட்டுகிறார். எவ்வளவு கேவலமாக நடந்துக் கொண்ட அவரிடம் தான் பேசக்கூட விரும்பவில்லை என்று கூறுகிறார்.

திட்டம் தவிடுபொடி
இதனால் சந்திரகலாவின் முகம் மாறுகிறது. தன்னுடைய திட்டம் தவிடுபொடியாக மாறியதை நினைத்து அவர் கடுப்பாகிறார். தொடர்ந்து மாப்பிள்ளையின் நன்மைக்காகவே தான் இவ்வாறு நடந்துக் கொண்டதாக அவர் கூறுகிறார். இதையடுத்து, தங்களின் நிறுவனத்தில் யாருக்கு எந்த பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிற்கு தெரியும் என்றும் கார்த்திக் கூறுகிறார்.

சரஸ்வதி சபதம்
இதனிடையே அங்குவரும் சரஸ்வதி, சந்திரக்கலாவை வெற்றியுடன் பார்க்கிறார். இதனால் அவர் மேலும் கடுப்பாகிறார். தொடர்ந்து வசுவும் தன்னுடைய அம்மாவை இனியாவது திருந்தி வாழ வேண்டும் என்று கூறுகிறார். முன்னதாக, சந்திரகலாவிடம், இந்தக் குடும்பத்தை குலைக்க நினைத்தால் அதை தான் நடக்க விடமாட்டேன் என்று சரஸ்வதி சபதம் போட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











