காய்ச்சலுடன் எக்சாம் எழுதிய சரஸ்வதி... நலம் விசாரித்த கோதை அம்மாள்!
சென்னை : விஜய் டிவியின் விறுவிறுப்பான தொடராக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் தொகுப்பாளர்களாக இருந்து சீரியலில் நடித்துவரும் தீபக் மற்றும் நக்ஷத்ரா இணைந்து நடித்துள்ளளனர். தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் தொடர்
விஜய் டிவி சீரியல்களின் முக்கியமான தொடராக மாறியுள்ளது தமிழும் சரஸ்வதியும். திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தினந்தோறும் விறுவிறுப்பான காட்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது.

படிப்பு குறித்த பொய்
இந்த சீரியலில் தொகுப்பாளர்களாக இருந்து சீரியலில் நடித்துவரும் தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கி வருகின்றனர். படிப்பு இவர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்து வருகிறார் இயக்குநர். பொய் சொல்லியதால் கோதை அம்மாவின் வெறுப்பை இருவரும் சம்பாதிக்கிறார்கள்.

சரஸ்வதி சபதம்
இதனிடையே மருமகன் கார்த்திக், சரஸ்வதியை மட்டமாக பேச, தான் +2 எக்சாமில் பாசானால் தன்னுடை கணவனிடமிருந்து பறிக்கப்பட்ட ஜிஎம் போஸ்டை திரும்பி வழங்க வேண்டும் என்றும் அவரிடம் சபதமிடுகிறார் சரஸ்வதி. அதற்கு கார்த்திக்கும் சம்மதிக்கிறார். இந்நிலையில் +2 எக்சாமிற்காக சிறப்பாக தயாராகிறார் சரஸ்வதி.

சரஸ்வதி குறித்து விசாரிப்பு
ஒருபுறம் இவர்களது இந்த முயற்சியை தடுக்க சந்திரகலாவும் சதித்திட்டங்களை தீட்டுகிறார். இந்நிலையில் எக்சாம் எழுதப்போகும் சரஸ்வதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஆயினும் அதே நிலையில் அவர் எக்சாமை எழுதி முடிக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்படும் கோதை அம்மாள் தன்னுடைய மகள் மூலம் சரஸ்வதியில் நிலையை கேட்டு தெரிந்துக் கொள்கிறார்.

மகிழ்ச்சியில் சரஸ்வதி
பரிட்சை எழுதிவிட்டு வெளியில் வரும் சரஸ்வதி, தன்னுடைய கணவன் மூலம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைகிறார். விரைவில் தான் தன்னுடைய மாமியாருடன் சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை அவளுக்கு வருகிறது. தன்னுடைய கணவனுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

விஜய் டிவி புதிய ப்ரமோ
எக்சாம் சிறப்பாக எழுதிய சந்தோஷத்தைவிட, கோதை அம்மாள் தன்னுடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்ததே தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவள் தன்னுயை கணவனிடம் கூறுகிறாள். இந்நிலையில் வீட்டிற்கு வரும் அவளை கோதை அம்மாள் எதிர்கொள்வதாக விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரமோவில் காணப்படுகிறது.

தமிழுக்கு சிறப்பு கிடைக்குமா?
+2 எக்சாமை சிறப்பாக எழுதியுள்தாக சரஸ்வதி கூறும் நிலையில், அவர் அதில் பாசாகிவிட்டால், அவளுடைய கணவனின் ஜிஎம் போஸ்ட்டை திரும்ப தருவதாக கார்த்திக் கூறுயுள்ளார். இதையடுத்து தமிழுக்கு மீண்டும் ஜிஎம் போஸ்ட் தரப்படுமா அதேபோல கோதை அம்மாளின் அன்பு தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு மீண்டும் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இனிவருஐம் எபிசோடுகளில் இதை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications











