Vinothbabu :ஷார்ட் பிலிம்ல நடிக்க போனது குத்தமாய்யா.. சீரியலில் இருந்து விலகவில்லை -வினோத் பாபு!

சென்னை : நடிகர் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் நடித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் கொடுத்து வரும் நிலையில், ஹீரோவும் ஹீரோயினும் தற்போது தீவு ஒன்றில் சிக்கியுள்ளதாக இதன் கதைக்களம் காணப்படுகிறது.

இந்தத் தொடரில் ஹீரோவாக நடித்துவரும் வினோத் பாபு, விரைவில் சீரியலை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சீரியலில் இருந்து விலகவில்லை என வினோத் பாபு விளக்கம் :விஜய் டிவியின் சீரியல்கள் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர். இந்தத் தொடரில் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்கள் சுவாரஸ்யம் அடைந்துள்ளனர். தற்போது ஹீரோவும் ஹீரோயினும் தீவு ஒன்றில் சிக்கிக் கொள்ள அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர் ஒளிபரப்பி வருகிறது.

பரபரப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் இந்தத் தொடரில் ஹீரோவாக நடித்துவரும் வினோத் பாபு ரசிகர்களை தன்னுடைய இயல்பான நடிப்பால் கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும் அதனால் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் இருந்த விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துவரும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Vijay TVs TVET serial hero vinoth babu exlains that he is not quitting the serial

இந்நிலையில் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று வினோத் பாபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு ஷார்ட் பிலிம் தானே நடிக்கப் போனேன், அதுக்குள்ள இவ்வளவா, தெய்வமே என்று அவர் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் எங்கேயும் போகவில்லை என்றும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில்தான் இருப்பதாகவும் தொடர்ந்து இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தொடரில் வெற்றி என்ற கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வினோத் பாபு. இவருக்கும் பவித்ராவிற்கும் இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் சீரியலில் சிறப்பாக காட்டப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் ஒளிபரப்பாகிவரும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் கடந்த ஆகஸ்ட் 16, 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கௌகோர் என்ற பெங்காலி சீரியலின் ரீமேக்காக இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால் இல்லத்தரசிகளின் அமோக ஆதரவை இந்தத் தொடர் பெற்றுள்ளது. தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்துவரும் பவித்ரா ஜனனி, இந்தத் தொடரில் அபிநயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் இவர், அடுத்தடுத்த போட்டோஷுட் மற்றும் அதன் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X