Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மீண்டும் விஜய் நட்சத்திர கொண்டாட்டம்... எங்கங்கே நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
விருதுநகர் : கோடைக் கொண்டாட்டமாக விஜய் டிவியின் நட்சத்திரக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இந்த நிகழ்ச்சி வாரயிறுதிக் கொண்டாட்டமாக மீண்டும் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் நாளையும் இலவசமாக நடைபெறவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.
அஜித்தை ஐதராபாத்துக்கே போய் மீட் பண்ண ஹீரோ... வைரலாகும் சூப்பர் புகைப்படம்... என்ன காரணம்?

விஜய் டிவி
விஜய் டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என அனைத்திலும் முன்னணியில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை அடித்துக் கொள்ள ஆளே இல்லாமல் காணப்படுகிறது. பல விஷயங்களை யோசித்து யோசித்து செய்து வருகிறது விஜய் டிவி.

டிஆர்பியில் முன்னிலை
இதன்மூலம் டிஆர்பில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றன. ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ஹீரோக்கள், ஹீரோயின்கள் என பார்த்து பார்த்து கௌரவித்து வருகிறது.

விஜய் டிவி அவார்ட்ஸ்
சமீபத்தில் விஜய் டிவி அவார்ட்ஸ் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடையை கொண்டாடும்வகையில் விஜய் டிவி, தற்போது விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தை திட்டமிட்டுள்ளது. மே மாதம் முழுவதும் வாரயிறுதியில் ஒவ்வொரு மாவட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

விஜய் நட்சத்திரக் கொண்டாட்டம்
இன்றைய தினம் விருதுநகரில் மாலை 6 மணிக்கு விஎச்என்எஸ்என் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதேபோல நாளை மாலை மதுரையில் எஸ்ஈவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என களைகட்ட உள்ளது.

அபிமான நட்சத்திரங்கள் பங்கேற்பு
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அபிமான பாரதி கண்ணம்மா தொடரின் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளனர்.

அனுமதி இலவசம்
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இலவசமாக பங்குபெறலாம் என விஜய் டிவி தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் டிவி புதிய ப்ரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே விஜய் டிவி நட்சத்திரங்கள் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது.

விஜய் டிவி நட்சத்திரங்கள்
நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்களும் இணைந்து ரசிகர்களை ஆட்டம், பாட்டத்தால் மகிழ்விக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது.