வீட்டில் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தினாங்க.. செந்தில் மட்டும் இல்லைனா.. நடிகை ஸ்ரீஜா பேட்டி!
சென்னை: விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி மக்களுக்கு பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில், ஸ்ரீஜா தங்களது காதல் குறித்து முதன் முறையாக பேட்டி அளித்துள்ளனர்.
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய செந்தில், பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில், சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சியாக ஸ்ரீஜா நடித்திருந்தார். இந்த சீரியலில் இவர்களின் கேமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால், அவர்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

செந்தில்,ஸ்ரீஜா: சரவணன் மீனாட்சி தொடரில் ரீல் ஜோடியாக நடித்த இவர்கள் 2014 ஆம் ஆண்டு ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
பிடிக்காத மாப்பிள்ளை: இந்நிலையில், தம்பதிகளான செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் தங்கள் காதல் குறித்து முதன் முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், எனக்கும் செந்திலும் திருமணம் நடப்பதற்கு முன்பு பெற்றோர் பார்த்த வரனுடன் நிச்சயம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் பெண் பார்க்க வரும் போதே, எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தாலும் என் அக்கா, அம்மா கட்டாயப்படுத்தியதால், அந்த திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். ஆனால், அந்த திருமணத்தில் எனக்கு விருப்பமே இல்லை.
கட்டாயப்படுத்தினார்கள்: அப்போது தான் என் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் தான் செந்தில் நம்பரை எனக்கு கொடுத்தார். அப்போது நான் இவரிடம் பேசத் தொடங்கினேன். அவர் தான் கல்யாணம் ஆகபோகுது ஆனால்,ஏன் சோகமா இருக்குறீங்க கல்யாணத்தில் விருப்பம் இருக்கா, இல்லையா என்று முதல் முதலில் இவர் தான் என்னிடம் கேட்டார். அப்போது தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லை, அனைவரும் கட்டாயப்படுத்தியதால், ஒகே சொன்னதாக சொன்னேன். உடனே செந்தில் கல்யாணம் பிடிக்கவில்லை என்றால், வீட்டில் சொல்லுங்கள் என்று சொல்லி எனக்கு தைரியத்தை கொடுத்தார்.
காதலை சொன்னேன்: செந்தில் சொன்னதற்கு பிறகு தான், அம்மாவிடம் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகுதான் செந்திலிடம் பேச ஆரம்பித்தேன், அப்போது தான் இவரை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியதால், நான் தான் முதலில் இவரிடம் காதலை சொன்னேன் அதன் பிறகுதான் அவர் எனக்கு ஒகே சொன்னார் என்று ஸ்ரீஜா தனது காதல் கதை குறித்து அந்த பேட்டியில் பேகி உள்ளார்.


Click it and Unblock the Notifications