ஸ்கெட்ச் போட்டு கவின காப்பாத்துறீங்களே பிக்பாஸ்.. இது வேற லெவல்..எங்கள பாத்தா எப்படி தெரியுது?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்றுகிறார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் பெயர் முழுவதும் டேமேஜ் ஆகிவிட்டது. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ்களுக்கெல்லாம் பட்டப் பெயர் வைத்து வருகிறார் கவின்.
சேரனுக்கு சைக்கிள் என்றும், மதுமிதாவுக்கு குள்ளச்சி என்றும் கஸ்தூரிக்கு காக்கா என்றும் பட்டப்பெயர் வைத்திருந்தார் கவின்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த பெண்களிடம் கடலை போட்டு நேரத்தை கழித்து வந்தார் கவின்.

சாக்ஷியுடன் காதல்
அதோடு மட்டுமின்றி வெளியில் தனக்கு காதலி இருப்பதை மறைத்து சாக்ஷியை காதலித்தார். அப்போது லாஸ்லியா தன்னுடன் பேச விரும்பியதை அறிந்த கவின், சாக்ஷியை கழிட்டிவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கமாக பழகினார்.

பேட்டரியை கழட்டி
இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். இதனால் விடிய விடிய பேசி வரும் அவர்கள், பிக்பாஸ் வீட்டின் விதியை மீறி மைக்கின் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசினர். இது அங்கிருந்த கேமராக்களில் பதிவானது.

மானத்தை வாங்கிய கமல்
இதனை கடந்த சனிக்கிழமை ஒளிப்பரப்பி இருவரின் மானத்தையும் வாங்கினார் கமல்ஹாசன். கவின் தான் மைக்கின் பேட்டரியை கழட்டியதோடு மட்டுமின்றி லாஸ்லியாவையும் கழட்ட வைத்து ரகசியம் பேசினார்.

கவின் பெயர் நாமினேஷன்
இதனால் லக்ஸரி பட்ஜெட்டின் மதிப்பெண் குறைந்தது. கவினின் இந்த காரியத்தால் ஹவுஸ்மேட்ஸ்கள் அவர் மீது செம கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக இன்றைய நாமினேஷனில் கவினின் பெயரையே அவர்கள் நாமினேட் செய்கின்றனர்.

காப்பாற்றும் பிக்பாஸ்
ஆனால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கமல் நேற்றே அறிவித்துவிட்டார். இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. இந்த வாரம் கவின் மீது அதிருப்தியில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்கள் எப்படியும் அவரைதான் நாமினேட் செய்வார்கள் என்பதை அறிந்தே பிக்பாஸ் அவரை காப்பாற்றும் வகையில் எவிக்ஷன் இல்லை என்று அறிவித்துள்ளார்.

கவினை கண்டுகொள்வதில்லை
சரவணன் எப்போதோ செய்த தவறுக்காக அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியே அனுப்பிவிட்டனர். ஆனால் கவின் இப்போதும் பெண்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பிக்பாஸ்.

மீண்டும் நிரூபித்துள்ள விஜய்டிவி
கவின் விஜய் டிவி புராடெக்ட் என்பதாலேயே அவரை நிர்வாகம் காப்பாற்றுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம்.


Click it and Unblock the Notifications











